ஷகீலா திரைப்பட டிரெய்லர், 24 மணி நேரத்தில் 3.4 மில்லியன் பேர் பார்த்து சாதனை
டிசம்பர் 17 புதன்கிழமை வெளியான ஷகீலா (Shakeela) திரைப்பட டிரெய்லர் (trailer) 24 மணி நேரத்திற்குள் 3.4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்த சாதனையை பதிவு செய்திருக்கிறது.
புதுடெல்லி: டிசம்பர் 17 புதன்கிழமை வெளியான ஷகீலா (Shakeela) திரைப்பட டிரெய்லர் (trailer) 24 மணி நேரத்திற்குள் 3.4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்த சாதனையை பதிவு செய்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, யூடியூப்பின் (YouTube) சிறந்த டிரெண்டிலும் இடம் பெற்றுள்ளது. நடிகை ஷகீலாவின் வாழ்க்கை குறித்த வாழ்க்கை வரலாறு, ரிச்சா சாட்டா (Richa Chadha) மற்றும் பங்கஜ் திரிபாதி (Pankaj Triapthi) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இதை இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். ஷகீலா டிரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் நடிகர் பங்கஜ் திரிபாதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நெட்டிசன்கள் ட்ரெய்லரைப் பார்க்க மிகவும் உற்சாகத்துடன் பார்த்தார்கள். இந்த திரைப் படத்தை வித்யா பாலனின் (Vidya Balan) டர்ட்டி பிக்சr (Dirty Picture) திரைப்படத்துடன் ஒப்பிட்டனர். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான படம் என்று ரிச்சா இதற்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
நடிகை ஷகீலாவின் உண்மையான வாழ்க்கையை முழுமையாக காண்பிப்பதாக கூறும் இந்தப் படத்தை மக்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த டிரெய்லரே காட்டிவிட்டது. ஷகீலா (Shakeela) திரைப்பட டிரெய்லர் சமூக ஊடகங்களில் (Social Media) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | கவர்ச்சி நடிகை ஷகீலா-ன் வாழ்க்கை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
“ஷகீலாவின் ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது உண்மைக்கதை, எந்த திரிபும் இல்லாமல் இயல்பாக சொல்லப்படும் ஒரு நிதர்சனக் கதை. இந்த திரைப்படத்திற்கு அற்புதமான பதிலுடன் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர் என்பதை அறிந்து திருப்தியாக இருக்கிறது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்” என்று அவர் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
90 களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை ஷகிலா (Shakila) மற்றும் நடிகை சில்க் ஸ்மிதா-வின் (Silk Smitha) வாழ்க்கை மற்றும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஷகீலா.
Also Read | ரசிகர்களுக்கு விருந்தாக ஷகீலா-ன் வாழ்க்கை படமாகிறது!
ஷகீலா திரைப்பட டிரெய்லரில், அவரது குழந்தை பருவ நாட்களையும், அவர் எவ்வாறு வெள்ளித்திரையில் (Silver Screen) மிகவும் விரும்பத்தக்க ஆளுமைகளில் ஒருவராக மாறுகிறார் என்பதும் அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் நடிகையின் தொடர் வெற்றிகள், துரிதமான முன்னேற்றம் என பல சுவராஸ்யமான திருப்பங்களை காணலாம்.
டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு ஷகீலா திரைப்படத்திற்கும் கிடைக்கும் என்பதற்கான டிரெய்லர் என திரைப்படக் குழுவினர் ஊற்சாகத்துடன் இருக்கின்றனர்.
ஷகீலா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. கிறிஸ்துமஸ் (Christmas) தினமான டிசம்பர் 25ஆம் தேதியன்று நாடு முழுவதும் வெளியாகிறது ஷகீலா.
Also Read | விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா! செம்ம வைரல் வீடியோ!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR