விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா! செம்ம வைரல் வீடியோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம்‘காத்து வாக்குல ரெண்டு காதல்’

Written by - ZEE Bureau | Last Updated : Dec 16, 2020, 02:39 PM IST
விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா! செம்ம வைரல் வீடியோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம்‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 

காத்து வாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kadhal) படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு (Vijay Sethupathi) இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.

Image

Image

Image

 

இந்த படத்தின் படப்பிடிப்பில் அவ்வப்போது நயன்தாராவும் (Nayanthara) கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ALSO READ | காதலி இல்லாமல் தனது கனவு கதை படப்பிடிப்பை தொடங்கிய விக்னேஷ் சிவன்..!

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள சமந்தாவும் (Samantha Akkineni) படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கிறார். சமந்தா அதற்கு  ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்க்கிறார். அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், 'தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கிறார். இவர்களின் இந்த கலாய் வீடியோ வைரலாகி வருகிறது.

ALSO READ | See Pic's: இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News