ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கிடப்பில் போடப்பட்டிருந்த 'இந்தியன்-2' படத்தின் பணிகள் மீண்டும் சில வாரங்களுக்கு புத்துணர்வுடன் தொடங்கப்பட்டு இருக்கிறது.  'இந்தியன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் 'இந்தியன்-2'.  தற்போது படத்தின் சில காட்சிகள் சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பாபி சிம்ஹா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  மேலும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.  'இந்தியன்-2' படத்திற்கு ஷங்கருடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இவர்கள் இந்த படத்தை 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓட செய்ய திட்டமிட்டுள்ளனர், அப்படி இவ்வளவு நேரம் இந்த படம் ஓடினால் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் இதுதான் மிக நீளமான படமாக அமையும். இதற்கு முன்னர் கமல் நடிப்பில் வெளியான 'ஹே ராம்' படம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் ஓடியது, தற்போது 'இந்தியன்-2' படத்தின் கால அளவு 3 மணி நேரம் 10 நிமிடங்கள் என்பதால் இந்த படம் கமல்ஹாசனின் இரண்டாவது மிக நீளமான அமையும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இயக்குனர் ஷங்கருக்கும் இந்த படம் மிக நீளமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது, படத்தின் கால அளவு அதிக நேரங்கள் இருப்பதால் ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாமல் அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக படத்தை கொண்டு செல்லும் மிகப்பெரிய டாஸ்க் இப்போது இயக்குனருக்கு உள்ளது.  



மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?


மேலும் 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தின் கால அளவு 3 மணி நேரம் 5 நிமிடங்கள், இருப்பினும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'இந்தியன்-2' படத்தின் முதல் ஷெட்யூலில், அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டதன் காரணமாக கமல்ஹாசனால் கலந்துகொள்ள முடியாமல் போனது.  இந்நிலையில் செப்டெம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடக்கப்போகும் அடுத்த ஷெட்யூலில் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார்.  மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ராதவேலுவுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மாற்றப்பட்டு இருக்கிறார், இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வனுக்கு அடுத்து வேள்பாரி; இந்த முறை ஷங்கர் - ஹீரோ இவரா... ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ