பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் அடுத்த பட அப்டேட் இதோ
தமிழின் பிரம்மாண்ட இயக்குநராக இருக்கும் நடிகர் சங்கர், ஆர்சி 15 படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார்.
எந்திரன் 2.0 படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்த நடிகர் சங்கர் இந்தியன் 2 படத்தினை தொடங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் சூட்டிங்கின்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உயிரிழந்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததால், படத்தின் சூட்டிங் தடைப்படது.
இதனைத் தொடர்ந்து படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கும் சங்கருக்கும் இடையே உரசல் எழுந்ததால் இந்தியன் 2 சூட்டிங் கைவிடப்பட்டு, நிலுவையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு இப்படத்தின் சூட்டிங் நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த சங்கர், ராம் சரணுடன் கூட்டணி சேர்ந்தார். இவர்கள் கூட்டணியில் ஆர்சி 15 திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆர்ஆர்ஆர் படத்தின் புரோமோஷனில் படு பிஸியாக இருந்த ராம்சரண் சூட்டிங் பங்கேற்பதில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார்.
மேலும் படிக்க | தளபதி 66-ல் நடிக்க மோகன் நோ சொன்னதால் களமிறங்கிய சாக்லெட்பாய்
ஒருவழியாக ஆர்ஆர்ஆர் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து ஆர்சி 15 சூட்டிங்கில் பங்கேற்ற ராம் சரண், தன்னுடைய முழு ஷெட்யூல் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார். இந்த அப்டேட்டை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கொடுத்துள்ளார். அமிர்தசரஸில் நடைபெற்ற ஆர்சி 15 சூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ள ராம்சரண், ஆச்சார்யா புரோமோஷனில் இனி பங்கேற்கப் போவதாக கூறியுள்ளார்.
ஆர்சி 15 சூட்டிங் நிறைவடைந்திருப்பதால், படத்தின் தலைப்பு உள்ளிட்ட அப்டேட்டுகளை சங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம். இயக்குநர் சங்கரைப் பொறுத்தவரை இப்படம் பெரிய கம்பேக் படமாக பார்க்கப்படுகிறது. அவரது இயக்கத்தில் 2.0 படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் இப்படத்தின் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்?- ஜி.வி. பிரகாஷ் கலகல
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR