மாஸாக வெளியான சிவராஜ்குமாரின் GHOST ஃபர்ஸ்ட் லுக்!
கன்னட திரையுலகின் மாஸ் ஹீரோவான சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் GHOST படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கன்னட மாஸ் ஹீரோ மற்றும் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்போது ஆக்ஷன் த்ரில்லர் படமான 'GHOST' படத்தில் நடித்துவருகிறார். இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.மற்ற மொழிகளில் உள்ள டாப் நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
பிளாக்பஸ்டர் 'Birbal'புகழ் ஸ்ரீனி இந்தப் படத்தை இயக்குகிறார், அரசியல்வாதியும் தயாரிப்பாளருமான சந்தோஷ் நாகராஜின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தோஷ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது.
மேலும் படிக்க | நா. முத்துக்குமார் - மழை நின்ற பிறகும் தூறிக்கொண்டிருப்பவர்
ஆக்ஷன் த்ரில்லரான 'GHOST'சுவாரஸ்யமான விஷயங்களோடு உருவாகிவருகிறது. கன்னட சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹெய்ஸ்ட் படம் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் க்ளைமாக்ஸை கேட்டு உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார். இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜூலை 12ஆம் தேதியான இன்று சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கிச்சா சுதீப், சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து 'GHOST' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சுவாரஸ்யமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
'GHOST' படக்குழுவில் தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த படத்திற்கு மஸ்தி மற்றும் பிரசன்னா விஎம் இருவரும் வசனம் எழுதுகிறார்கள். தகரு மற்றும் சலகா போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு மஸ்தி வசனம் எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கவுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR