பசங்க, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூட வா, கலகலப்பு எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விமல் (Vimal) சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. இங்கு அவருடைய பூர்வீக வீடு உள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த கிராமத்தில்தான் உள்ளனர். விமலின் வீட்டிற்கு எதிரே அந்த பகுதி மக்கள் வழிபடும் (Temple) விளக்குத்தூண் ஒன்று இருப்பதாகவும் அதனை சுற்றி ஊர் மக்கள் சிறிய மேடை ஒன்றை சமீபத்தில் அமைத்ததாகவும் தெரிகிறது.


ALSO READ | அதிரடியான வரவேற்ப்பு! மாஸ்டர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!


இந்நிலையில் தற்போது நேற்று முன்தினம் திடீரென அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் விளக்குத்தூண் மேடையை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தினர், இது விமல் மற்றும் அவரது குடும்பத்தினரின் வேலையாகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.


அதன்படி, அந்த ஊரின் கோவிலைச் சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Top 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR