Top 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master!!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரிலீசான தினத்திலிருந்து சக்கைபோடு போட்டு வருகிறது. பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆன மாஸ்டர் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

Last Updated : Jan 19, 2021, 12:53 PM IST
  • மாஸ்டர் படம் மூன்றே நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ .100 கோடியை வசூல் செய்தது.
  • பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 நாட்களில் மாஸ்டர் அற்புதமான வசூலைப் பெற்றது.
  • 2 கோடி பங்கு மதிப்பை தாண்டியுள்ள தளபதி விஜய்யின் முதல் படம் மாஸ்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master!! title=

சென்னை: பொங்கல் பரிசாக தளபதி விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த மாஸ்டர் பட அவர்களை ஏமாற்றவில்லை. மிகுந்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான மாஸ்டர் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தளபதி விஜய் (Vijay) மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரிலீசான தினத்திலிருந்து தலைப்புச் செய்திகளில் இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மாஸ்டர் படம் உலகளவில் மிகப்பெரிய வசூலை செய்துள்ளது.

இந்த படம் வெறும் மூன்று நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ .100 கோடியை வசூல் செய்தது. பிலிம் டிராக்கர் கௌஷிக்கின் கருத்துப்படி, மாஸ்டர் இப்போது தமிழகத்தில் சிறந்த வசூலைக் கண்ட ஆல் டைம் சிறந்த 10 படங்களின் பட்டியலில் நுழைந்துள்ளது. அவர் ட்வீட் செய்து, “#Master முதல் 5 நாட்களில் தமிழகத்தில் சுமார் 82 கோடி வசூல் செய்துள்ளது. மாஸ்டர் படம் தமிழகத்தின் அதிக வசூல் செய்த ஆல்டைம் டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளது. இது இந்த பட்டியலில் #ThalapathyVijay –ன் நான்காவது எண்ட்ரியாகும். இன்னும் அதிய மைல்கல்கள் வரவுள்ளன” என்று கூறியுள்ளார்.

2 கோடி பங்கு மதிப்பை தாண்டியுள்ள தளபதி விஜய்யின் முதல் படம் மாஸ்டர் (Master) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் படத்தின் வசூல் (அனைத்து மொழிகளிலும்) அருமையாக உள்ளது. தங்கள் அபிமான நட்சத்திரங்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள அன்பும் சினிமா மீது மக்களுக்கு உள்ள ஆர்வமும் இதிலிருந்து தெளிவாகிறது.

பாக்ஸ் ஆபிஸில் (Box Office) முதல் 5 நாட்களில் மாஸ்டர் அற்புதமான வசூலைப் பெற்றது. இந்திய அளவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து மாஸ்டர் மொத்தமாக ஆறாவது நாளில் 8.70 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

ALSO READ: அதிரடியான வரவேற்ப்பு! மாஸ்டர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

அனைத்து மொழிகளிலும் மாஸ்டர் படம் செய்துள்ள வசூல் இதோ:

நாள் 1: 34.80 கோடி ரூபாய்

நாள் 2: 18.30 கோடி ரூபாய்

நாள் 3: 15.80 கோடி ரூபாய்

நாள் 4: 12.50 கோடி ரூபாய்

நாள் 5: 14.50 கோடி ரூபாய்

நாள் 6: 8.70 கோடி ரூபாய்

மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 105.10 கோடி ரூபாய்

ஆரம்ப மதிப்பீட்டின்படி, 6 நாட்களில் இந்தியா முழுவதற்குமான மொத்த வசூல் ரூ. 122.00 கோடியாகும்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து தளபதி விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோவின் XB Film Creators மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளனர்.  விஜய் மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தவிர, இந்த படத்தில் மாளவிகா மோகனன், நாசர், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா ஜெரேமியா, சஞ்சீவ், ஸ்ரீநாத், வி.ஜே. ரம்யா மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

ALSO READ: பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News