கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2K கிட்ஸை குறிவைத்து இந்தப் படம் தயாராகியிருப்பதாகவும் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் எனவும் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறதென்றும், தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடிக்கலாம் எனவும் கூறிவருகின்றனர். அதேசமயம் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பிலும், உடல்மொழியிலும் தனுஷின் சாயல் தெரிகிறது. இப்படியோ போனால் இரண்டு படங்களை தாண்டி அவரால் ஹீரோவாக நிலைக்க முடியாதென்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். மறுபுறம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நடிகர் ஷாரூக்கான்: மெக்காவில் உம்ரா! வைஷ்ணவ் தேவியில் சரணகோஷம்!


'சமீபத்தில் தெலுங்கிலும் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது லவ் டுடே. இந்தச் சூழலில் விரைவில் லவ் டுடே படம் ஹிந்தி டப் செய்யப்பட்டோ அல்லது ரீமேக் செய்யப்பட்டோ வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே இப்படத்தின் மாபெரும் வெற்றி பிரதீப் ரங்கநாதனை தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் இந்தியளவிலும் பிரபலப்படுத்தியுள்ளது.



இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன் முதன் முதலில் இப்படத்தை கமிட் செய்யும்பொழுது, 70 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாகவும். மேலும் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலாக 80 ரூபாய் லட்சம் கொடுத்துள்ளதாகவும், இதன்முலம் லவ் டுடே படத்திற்காக அவர் மொத்தம் 1.50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. 


மேலும் படிக்க | ரஜினிக்கு பாபா வில்லன் பிறந்தநாள் வாழ்த்து! என்ன கூறினார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ