Siddharth and Aditi Rao Hydari Secret Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சித்தார்த், தன்னுடைய நீண்ட நாள் காதலியான அதிதி ராவை ரகசியமாக திருணமான செய்துக் கொண்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில காலமாக கூறபட்டு தான் வருகிறது. தற்போது திரையுலகில் இருவருமே திறமையான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர், சித்தார்த். கடந்த 2021ம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் தான் இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்துள்ளது, இது தொடர்பாக அடிக்கடி சோஷியல் மீடியாவில் இவர்களே வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் (Aditi Rao Hydari and Siddharth Tie The Knot) செய்துள்ளதாக கூறுகின்றனர்.



 மேலும் படிக்க | Thalaivar 171 Update : தலைவர் 171 படத்தின் சுட சுட அப்டேட், அடுத்த மாதம் டைட்டில் டீசர்





முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் சித்தார்த். அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு சித்தார்த்துக்கும் அவரது முதல் மனைவியான மேக்னா நாராயணன்னுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர், நடிகர் சித்தார்த் நடிகை சமந்தாவை காதலித்த வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின, ஆனால் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அந்த கிசுகிசுப்பும் பின்னர் அடங்கின.


அதன் பின்னர் நடிகை அதிதி ராவ் சித்தார்த்தை காதலித்து வந்த நிலையில், இன்று பிரபலங்கள் பலரையும் அழைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொள்ளாமல் ரகசியமாக செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடிகை அதிதி ராவ் சித்தார்த் இவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ் கடந்த 2013 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த்தின் திருமணம் இன்று காலை வனப்பர்த்தியில் உள்ள அதிதி ராவின் குடும்பத்துக்கு சொந்தமான ஸ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளதாக உள்ளூர் மீடியாக்கள் உறுதி செய்துள்ளன. எனினும் இது தொடர்பாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் திருமண புகைப்படங்களுடன் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Lokesh Kanagaraj: மனைவி குறித்த கேள்விக்கு டென்ஷனான லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ