மனைவி குறித்த கேள்விக்கு டென்ஷனான லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார் தெரியுமா?

Director Lokesh Kanagaraj About His Wife : இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளதை தொடர்ந்து இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது. இதில் ஸ்ருதி ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 26, 2024, 01:27 PM IST
  • மனைவி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்
  • இவருக்கு எப்போது திருமணம் நடந்தது?
  • இவர் தனது மனைவி குறித்து பேசியது என்ன?
மனைவி குறித்த கேள்விக்கு டென்ஷனான லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார் தெரியுமா? title=

Director Lokesh Kanagaraj About His Wife : இதுவரை தமிழ் திரையுலகில் டாப் இயக்குநராக மட்டுமே இருந்து வந்த, லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் ‘இனிமால்’ என்ற ஆல்பம் பாடல் மூலமாக நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நடிகராக மாறிய லோகேஷ் கனகராஜ்:

மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, விக்ரம், லியோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தன் படங்களில் கூட ரொமான்ஸ் காட்சிகள் வைக்காத அவர், ஸ்ருதி ஹாசனுடன் ‘இனிமேல்’ பாடலில் விழுந்து விழுந்து ரொமான்ஸ் செய்வது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரொமாண்டிக் ஹீரோ லோகி..

இனிமேல் பாடல், நேற்று வெளியானது. இதில், லாேகேஷ் கனகராஜ்ஜும் ஸ்ருதி ஹாசனும் காதலர்களாக நடித்துள்ளனர். இந்த பாடலில், புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் எப்படி தங்களின் உறவை சமாளிக்கின்றனர் என்பதை காண்பித்துள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசனுடன் பயங்கரமாக ராெமான்ஸ் செய்கிறார். முதலில், லோகி நடிகராக களமிறங்கியதே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க, அவர் ரொமான்ஸ் செய்வது பேரதிர்ச்சியாக இருந்தது. 

மனைவி குறித்த கேள்வி..

நேற்று நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் லாேகேஷும் ஸ்ருதி ஹாசனும் கலந்து கொண்டனர். அப்போது லாேகியிடம், உங்கள் மனைவி நீங்கள் நினைப்பது குறித்து என்ன நினைக்கிறார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் தொடக்கத்தில் இருந்தே தனது தனிப்பட்ட கேள்விகளை ஒதுக்கி வருவதாகவும் அதைப்பற்றி தான் பேச விரும்பவில்லை என்றும் கூறினார். தான் திரைத்துறைக்குள் நுழைந்த போதே அது குறித்து பேசக்கூடாது என்று முடிவு செய்திருப்பதாகவும் பாராட்டுவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அது தன்னோடு நிற்க வேண்டும் என்றும் கூறினார். தனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியில் தெரியப்படுத்தக்கூடாது என்பதில் தான் மிகவும் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். 

மேலும் படிக்க | விஜய்யின் ‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அட, இவரா?

லோகேஷிற்கு திருமணம் ஆகிவிட்டதா? 

இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பது பலருக்கு சந்தேகமாக இருந்தது. இவருக்கு 2012ஆம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டதாம். இவரது மனைவியின் பெயர், ஐஸ்வர்யா என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆத்விகா, ஆருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனராம். இருவருமே வேலைக்கு சென்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சினிமா ஆசையால் இயக்குநராக மாறியிருக்கிறார், லோகேஷ் கனகராஜ். 

தலைவர் 171..

நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ், அவரது 171வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் லோகி இறங்கியிருக்கிறார். இதற்காக அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கிறார். சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியாேக்களும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின. 

மேலும் படிக்க | Taapsee Pannu : 10 வருட காதலரை கரம் பிடித்த நடிகை டாப்சி! இவரது கணவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News