)
Rajinikanth Thalaivar 171 Shooting Date Title Teaser Update : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர், தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படத்திலும் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்த படம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
வேட்டையன் திரைப்படம்:
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஞானவேல். இவர் அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து எடுத்துக்கொண்டிருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுப்டி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி, சென்னை என பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் அவர் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமூக அக்கறையுடன் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் 80 சதவிகிதத்தை கடந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து, ரஜினி லோகேஷ் கனகராஜ்ஜின் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.
தலைவர் 171:
கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இது அவரது 171வது படமாகும். இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அன்பரிவ் ஸ்டண்ட் இயக்குநர்கள் சண்டை பயிற்சியாளர்களாக உள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார்.
தலைவர் 171 படத்தின் சூட்டிங் எப்போது?
இந்நிலையில் முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் பான் இந்தியா நடிகர்கள் இந்த படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது தொடர்பான தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதை எழுதி வரும் லோகேஷ் கனகராஜ்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தின் கதை எழுதுவதில் பிசியாக உள்ளார். இதற்காக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். இதையடுத்து அவர், பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ