தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தவகையில் தற்போது இன்று நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் டக்கர் பட டீஸர் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டக்கார். இந்தப் படத்தின் டீஸர் நேற்று திங்கள்கிழமை வெளியானது. காதல் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க: நடிகை இலியானா கர்ப்பம்..‘எப்புட்ரா’? ஷாக் ஆன ரசிகர்கள்


அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் ’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்த நிலையில் தற்போது இந்த டீஸரை படக்குழுவினர் வெளியிட்டனர். டீஸர் வீடியோ இதோ: 



முன்னதாக நடிகர் சித்தார்த் தமிழில் கடைசியாக 2019 ஆண்டு அருவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்படி 3 ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்கவில்லை. தற்போது இவர் டக்கர், இந்தியன் 2, சித்தா ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Cholas Are Back: மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் டீம்! ஒன்று கூடிய திரைப்பட நட்சத்திரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ