முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் நடிக்க இருப்பவர்கள் யார் யார்? ஹீரோயினாக நடிப்பது யார்? இதோ முழு விவரம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில்க் ஸ்மிதா..


தமிழ் திரையுலகில் இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாத இடத்தை பிடித்த நடிகை, சில்க் ஸ்மிதா. 80களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் இவர். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர், நடிகை ஒருவரிடம் துணை மேக்-அப் கலைஞராக இருந்து, மெல்ல மெல்ல திரையுலகிற்குள் நுழைந்தார். இவருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு..


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றினை இதற்கு முன்னரே பலர் படமாக எடுக்க முயற்சித்தனர். ஆனால், ஏதோ சில காரணங்களினால் அந்த முயற்சிகள் யாவும் பாதியில் முடிந்து போனது. இந்த நிலையில், தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக மாற உள்ளதாக புதிய அறிவிப்ப ஒன்று வெளியாகியுள்ளது. இதை, சென்னையை சேர்ந்த புதுமுக இயக்குநர ஜெயராம் என்பவர் இயக்க இருக்கிறார். 


சிலக்கின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது யார்..? 


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாப்பாத்திரத்தில் சந்திரிகா ரவி நடிக்கிறார். இவரும் கவர்ச்சி கதாப்பாத்திரங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து, செய், வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “Untold Story” என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இப்படம், அடுத்த வருடம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அசர வைக்கும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?


ஏற்கனவே வெளிவந்த சில்க் ஸ்மிதா குறித்த படங்கள்..


2011ஆம் ஆண்டு வித்யா பாலன் நடிப்பில் தி டர்டி பிக்சர்ஸ் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் கதை, சில்க் ஸ்மிதாவின் கதையை வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இப்படத்தில் அவர் குறித்த பல விஷயங்களை ஃபில்டர் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 


சில்க் ஸ்மிதா வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள்..


நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் பல இன்னல்களும் துயரங்களும் இருந்தன. பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இவர், குடும்பத்தின் நிலை காரணமாக படிப்பை பாதியில் இடை நிறுத்தினார். சிறுவயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணம் செய்து கொண்ட நபரும் இவரை பல வகைகளில் துன்புறுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பியோடிய சில்க், சினிமாவில் மேக்-அப் கலைஞராக இருந்தார். அப்படியே சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு அவர் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களுக்கு நடனமாடுவது, முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். சினிமாவைத்தாண்டி சில்கின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் தற்போது உருவாகி வரும் படத்தில் காண்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அன்னபூரணி படத்தின் முதல் நாள் கலெக்ஷன்! எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ