அன்னபூரணி படத்தின் முதல் நாள் கலெக்ஷன்! எவ்வளவு தெரியுமா?

Annapoorani Movie Box Office Collection: நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த அன்னபூரணி படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Dec 2, 2023, 01:26 PM IST
  • நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம், அன்னபூரணி.
  • இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர்.
  • முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?
அன்னபூரணி படத்தின் முதல் நாள் கலெக்ஷன்! எவ்வளவு தெரியுமா?  title=

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். இப்படம், முதல் நாளில் மட்டும் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? 

அன்னபூரணி திரைப்படம்:

கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை, பெரும்பாலும் படத்தின் ஹீரோவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள்தான் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, பெண்களை மையப்படுத்தியும் கதைகள் தயாராவதுண்டு. ஆனால், அவை ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பினை பெறுவதில்லை. நடிகை நயன்தாரா, நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தாலும், தனியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிக்கிறார். அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான், அன்னபூரணி. இந்த படத்தை புதுமுக இயக்குநர் நிலேஷ் குமார் இயக்கியுள்ளார். இது, நயன்தாராவின் 75வது படமாகும். 

அன்னபூரணி படத்தில், நயன்தாராவிற்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். ஏற்கனவே, ராஜா ராணி படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த இவர்கள், 10 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களை தவிர, சத்ய ராஜ், கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு…

நயன்தாரா தனியாக தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். மாயா படத்தில் ஆரம்பித்து, அன்னபூரணி படம் வரை அந்த ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. கலாச்சாரத்தை பின்பற்றும் பிராமண பெண் ஒருவர், தலை சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக அவர் தனது குடும்பத்தின் மதிப்புகளை விடுத்து, நான் வெஜ் உணவுகளையும் சமைக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார். இதை மையக்கருவாக வைத்து, அன்னபூரணி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதற்கு நல்ல ரேட்டிங்கையே கொடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

முதல் நாள் வசூல்..

அன்னபூரணி திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று (டிசம்பர் 1) வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இப்படம், ரூ.80 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அன்னபூரணி படத்துடன் சேர்த்து, ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படமும் வெளியானது, அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிமல் படமும் ரிலீஸானது. அனிமல் படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது அது வரவேற்க்கத்தக்கதாக இல்லை. பார்க்கிங் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். இப்போதைக்கு, இந்த இரண்டு படங்கள்தான் போட்டியில் உள்ளன. இன்றும் நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால், அன்னபூரணி படத்தின் வசூல், கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நயன்தாராவின் அடுத்த படம்..

இந்த வருடம் அதிக படங்களில் நடித்த நாயகிகளுள் நயன்தாராவும் ஒருவர். அன்னபூரணி படத்தை அடுத்து, இன்னும் இரண்டு படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். அதில் ஒரு படம், ‘டெஸ்ட்’. இந்த படத்தில் இவர் மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் ‘மன்னாங்கட்டி சின்ஸ் 1960’ இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது நடைப்பெற்று வருகின்றன. படங்களில் பிசியாக நடிப்பது மட்டுமன்றி, தனியாக சில சுய தொழில்களையும் நயன்தாரா செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் 9 ஸ்கின்ஸ் என்ற பியூட்டி பிராண்டை அவர் அறிமுகப்படுத்தியிருந்தார். 

மேலும் படிக்க | அசர வைக்கும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News