பத்தல பாடலுக்கு நடனமாடிய சிம்பு! வைரலாகும் வீடியோ!
`விக்ரம்` படத்தில் கமல் பாடிய `பத்தல பத்தல` பாடலுக்கு நடிகர் சிம்புவும், சாண்டி மாஸ்டரும் நடனமாடும் வீடியோ டிரெண்டாகியுள்ளது.
கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் உதயநிதி, சிம்பு போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ரஜினி, விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் இந்நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் நடந்தேறின. விஜய் பெயரை உதயநிதி மேடையில் கூறியதும் அலைகடலென திரண்டிருந்த ரசிகர்கள் கத்தி கூக்குரலிட்டு அந்த இடத்தையே அதிர வைத்தனர்.
மேலும் படிக்க | விஜய்க்காக கத்திய ரசிகர்கள்! அமைதியாக இருக்க சொன்ன கமல்!
இந்த நிகழ்ச்சியில் பலரும் எதிர்பார்த்திடாத வகையில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு இருந்தார். சிம்பு நகைச்சுவையாக கமலிடம், சார் அப்டியே அந்த மருதநாயகம் படத்தையும் வெளியிடுங்க என்று கூறினார். அதனை தொடர்ந்து இந்த படத்தில் கமல் பாடிய 'பத்தல பத்தல' பாடலுக்கு நடிகர் சிம்பு மேடையில் நடனம் ஆடினார், அவருடன் நடன மாஸ்டர் சாண்டியும் இணைந்து சில ஸ்டெப்புகளை போட்டனர். இந்த இருவரும் ஆடுவது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இதில் சில சர்ச்சைக்குரிய வரிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை நீக்கக்கோரி சில பிரச்சனைகளும் நடந்து வருகிறது.
கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, மகேஸ்வரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பான் இந்திய படமான இது ஜூன்-3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கமல் அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
மேலும் படிக்க | விடியல முடிவு பண்ணுறது நான்தான் - வெளியானது விக்ரம் ட்ரெய்லர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR