`ஓ மை கடவுளே` இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு!
`ஓ மை கடவுளே` படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் நடிகர் சிம்பு, இவரின் திறமையை பாராட்டும் விதமாக அண்மையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இவரது படங்களுக்கு போதுமான வரவேற்பு இல்லாமல் இருந்த நிலையில், இவரை மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் விதமாக 'மாநாடு' (Maanaadu movie) படம் அமைந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிம்பு (Actor silambarasan) ஒரு ஃபார்முக்கு வந்து இருக்கிறார். தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கிறது, சில படங்களில் இவர் நடித்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் இயக்கத்தில் தமிழில் வெளியான 'ஓ மை கடவுளே' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகப்போகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிம்பு 'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு 'கொரோனா குமார்' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR