சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தமா? என்ன நடந்தது?

சிவகார்த்திகேயனை வைத்து மடோன் அஷ்வின் இயக்கும் `மாவீரன்` படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
'மண்டேலா' படத்தின் பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தின் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது, ஆனால் படம் தொடங்கிய வேகத்திலேயே படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் மடோன் அஷ்வின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தான் மாவீரன் படம் கைவிடப்படுகிறது என்று தகவல்கள் கூறப்பட்ட நிலையில் மழை பெய்வதன் காரணமாகவே மாவீரன் படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக மற்றொரு செய்தி வெளியானது. மாவீரன் படம் பற்றி பல செய்திகள் வெளியான நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட படத்தின் பணிகள் மீண்டும் முழுவேகத்தில் தொடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்
'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடிக்கிறார் மற்றும் இந்த படத்தில் இயக்குனர் மிஸ்கின் வில்லனாகவும், யோகி பாபு, யூடியூப் பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸி போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முன்னர் படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை காட்டும்படியான ஒரு மிரட்டலான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது அதிதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது, இப்படம் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று சில தகவல்களும் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார் மற்றும் இந்த ஆக்ஷன் கலந்த திரில்லர் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் சரியாக ஓடாததால் மாவீரன் படத்தை நம்பி உள்ளார் சிவகார்த்திகேயன்.
மேலும் படிக்க | பிறந்தநாள் கொண்டாடுவதில் நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ