Doctor: OTT ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்னின் டாக்டர்
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.Photo: (Instagram- @SivakarthikeyanDoss)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) இந்த யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டாக்டர் (Doctor) திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ALSO READ | டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு
கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த இந்த படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. இதற்கிடையில் இந்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட டாக்டர் படக்குழு முயற்சி செய்தது. சில பிரச்சனைகளால் அந்த முடிவை கைவிட்ட படக்குழு. பிறகு டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் டாக்டர் படத்தை வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம் ஒரு செய்தி தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது டாக்டர் படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் படக்குழு வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR