கடந்த 2021ம் ஆண்டு வசந்த் எஸ் சாய் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'.  இந்த திரைப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமெளலி, பார்வதி மேனன், காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், மாரிமுத்து, செந்தில்குமாரி ஆகியோர் நடித்துள்ளனர்.  அசோக மித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய மூன்று பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்?


1980, 1995, 2007 என இந்த காலகட்டங்களில் வாழும் மூன்று பெண்கள் நாளுக்கு நாள் அனுபவிக்கும் கஷ்டங்களை இப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.  பெண் சுதந்திரம், சமத்துவம் என காலம்காலமாக எவ்வளவு நியாயங்கள் பேசி போர்க்கொடி தூக்கினாலும், பெண்களின் நிலை மாறியபடில்லை என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு இப்படம் காட்டியது.  உடலளவிலும், மனதளவிலும் வரும் வேதனைகள் அனைத்தையும் பெண்கள் தாங்கிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கணவனுக்கும், குடும்பத்தினருக்கும் சேவை செய்யவேண்டும்.  தனது கனவுகளையும், ஆசைகளையும் துறந்து குடும்பத்தினரின் விருப்பப்படி பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள்.  இத்தகைய அடக்குமுறையிலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும் என்பதையும், சமூகத்தில் பெண்களுக்கெதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளையும் இப்படம் தெள்ளத்தெளிவாக காட்டியிருந்தது.



தற்போது இந்த படத்திற்கு சர்வேதேச அங்கீகரம் ஒன்று கிடைத்து பெருமை சேர்த்துள்ளது.  ஏற்கனவே இப்படம் வெளியாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கூடுதலா சிறப்பு படத்திற்கு கிடைத்துள்ளது.  ஜப்பானில் உள்ள ஃபுக்குவோகா என்கிற நகரில் ஒரு லைப்ரரி செயல்பட்டு வருகிறது, இந்த லைப்ரரியின் சிறப்பம்சம் என்னவென்றால் உலகில் வெளியாகும் படங்களில் சிறப்பான படங்களை தேர்வு செய்து, எதிர்கால சந்ததியினருக்காக இதனை பாதுகாத்து வைத்துக்கொள்கிறார்கள்.  அப்படி இவர்கள் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் படம் தமிழில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'.  இதனை 'ஆசியாவின் மாஸ்டர் பீஸ்' என்று கூறி பெருமை சேர்த்துள்ளனர்.


மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR