ரெமோ இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் எஸ்ஜே சூர்யா!
ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
அட்லீயின் முன்னாள் உதவி உதவி இயக்குனரான பாக்கியராஜ் கண்ணன் முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து 2016 ஆம் ஆண் ரெமோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாக்கியராஜ் கண்ணன். இந்த படம் மிக பெரிய ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவரது இரண்டாவது படமான சுல்தான் படத்தில் கார்த்தி நடித்து இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்கிய நிலையில், படம் 2021ல் திரையரங்கில் வெளியானது. கொரோனா லாக்டவுன் காரணமாக படம் சரியாக ஓடவில்லை. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் அடுத்த யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது, பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு! ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்க உள்ளது. மேலும் இது குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளது. இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள், யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. எஸ்.ஜே.சூர்யா கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்து இருந்தார். தீபாவளி அன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கேங்ஸ்டராக லாரன்ஸ் நடிக்க, எஸ்ஜே சூர்யா இயக்குனராக நடித்து இருந்தார். அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் சங்கரின் கேம் சேஞ்சர், இந்தியன் 2, தனுஷின் டி 50, விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் பெயரிடப்படாத பல படங்கள் வெளியாக உள்ளது.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் அமோக வெற்றி இந்திய சினிமாவின் மைல் கல்லாக இன்றும் நினைவில் உள்ளது. தற்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஷங்கரின் இயக்கத்தில் 2.0 வெளியாகி ஐந்து ஆண்டு ஆகி இருந்தாலும் அவரது படங்களுக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்த நிலையில் தற்போது இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. மேலும் ஷங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இந்தியன் 3 படப்பிடிப்பும், கேம் சேஞ்சர் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இந்தியன் 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா தவிர, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜாயின்ட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்தியன் 2 வெளியான ஓரிரு மாதங்களில் இந்தியன் 3 வெளியாகும்.
மேலும் படிக்க | மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது - இயக்குனர் விஜய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ