விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு! ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மெர்ரி கிறிஸ்மஸ் படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.  இதற்கான புரமோஷன் வேலைகளில் அவர் உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 9, 2024, 04:21 PM IST
  • விஜய் சேதுபதி நடித்துள்ள மெர்ரி கிறிஸ்மஸ்.
  • ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.
  • ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கி உள்ளார்.
விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு! ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி! title=

விஜய் சேதுபதி இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.  96, சூப்பர் டீலக்ஸ், ஜவான், விக்ரம், மாஸ்டர் மற்றும் பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப்  நடித்து இருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படம் வரும் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.  இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில் தற்போது விஜய் சேதுபதி உள்ளார்.  விஜய் சேதுபதியின் ரசிகர் ஒருவர், லோகேஷின் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU)ல் இருந்து மேலும் படங்களில் நடிப்பீர்களா என்று கேட்டார். லோகேஷ் கனகராஜின் பிளாக்பஸ்டர் படமான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், " அது லோகேஷ்க்கு கூட தெரியாது, எனக்கும் தெரியாது, நீங்கள் என்னைக் கேட்கும் வரை, நான் அந்த படத்தில் (விக்ரம்) இறந்துவிட்டேன், எனக்குத் தெரியாது, அவர்கள் என்னை மீண்டும் கொண்டு வர வேறு ஏதாவது செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருக்கலாம்" என்று பதில் அளித்தார். 

மேலும் படிக்க | சிம்புவுடன் நடித்தே தீருவேன் - அடம்பிடிக்கும் பிரபல நடிகை!

இந்த கேள்விக்கு பிறகு ஒரு படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பது பற்றி பேசிய விஜய் சேதுபதி, "ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுப்பது அதிக அழுத்தம். அந்தாதுன் படத்தின் தொடர்ச்சியை யாரோ கேட்டபோது, ​​அந்தாதுனுக்கு முன், உங்களுக்கு அந்தாதுன் மீது எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. படம் வெளியானவுடன், உங்களுக்கு அந்த படத்தின் மீது ஒரு கருத்து உள்ளது. அப்படியானால் அதற்கு மேல் செய்ய வேண்டும். ஏனென்றால் இரண்டாம் பாகத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நீங்கள் வருகிறீர்கள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினம். ஆனால் அந்த ஐடியா கிடைத்தால் வெற்றி கிடைக்கும்" என்று கூறினார்.

மேலும், இனி வில்லன் மற்றும் கவுரவ வேடங்களில் நான் நடிக்க போவது இல்லை என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.  கவுரவ வேடங்களில் நடிக்க என்னை அதிகமானோர் அணுகுகின்றனர். தற்போது 10 முதல் 20 படங்கள் நான் கெஸ்ட் ரோலில் நடிக்க வெயிட்டிங்கில் உள்ளன. ஒருகட்டத்துக்கு மேல் நான் அதை தவிர்க்க முயற்சி செய்துவிட்டேன்.  நான் அந்த படத்தில் நடிப்பதால் அந்த படத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கும், எனவே நான் நடித்து வந்தேன்.  எனக்கு அப்போது தவறாக தெரியவில்லை.  ஆனால் அது என்னுடைய படங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஒரு கட்டத்தில் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தையே அது பாதித்தது.  எனவே அதற்கு நோ சொல்லிவிட்டேன்.

வில்லனாகவும் நிறைய படங்களில் நடித்து விட்டேன்.  இனி வரும் காலங்களில் அதற்கும் நோ சொல்ல இருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தை நோக்கி செல்கிறது. நான் வேண்டாம் என்று சொன்னாலும் கதையை மட்டுமாவது கேட்க சொல்கின்றனர் என்று கூறியுள்ளார்.  மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விரும்புகிறீர்களா என்று சமீபத்தில் ஸ்ரீராம் ராகவனிடம் கேட்கப்பட்டபோது, ​​படத்தின் தொடர்ச்சி எதுவும் இருக்காது என்று அவர் உடனடியாக பதிலளித்தார். ஜனவரி 12, 2024 திரையரங்குகளில் மெர்ரி கிறிஸ்மஸ் வெளியாகிறது.  

மேலும் படிக்க | கேம் என்றாலே பிரச்சினைதான் - இமெயில் பட நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேச்சு!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News