COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் சூரரைப்போற்று! படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும்.அதுவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் "கதாநாயகி என்று கூட சொல்ல முடியாது. 


கதையின் நாயகியாக "பொம்மி என்ற கேரக்டரில் நடித்த "அபர்ணா பாலமுரளி படத்தில் சூர்யாவுடன் வரக்கூடிய ஒவ்வொரு சீனிலும் கணக்கச்சிதமாக நடித்திருப்பார்.சூர்யா ஒரு பக்கம் தன்னுடைய கனவை நோக்கி பறந்து கொண்டிருக்க அவர் துவண்டு விழும் போதெல்லாம் உறுதுணையாக அவரை ஆற்றுப்படுத்துவார்.


சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நடிப்பு எந்தளவுக்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் விரும்பபட்டதோ அதே அளவு ஏன்? அதனை விடவும் "பொம்மி கதாபாத்திரத்தை சூர்யாவின் ரசிகர்களே கொண்டாடி தீர்த்தார்கள்.


அதுவும் படத்தில் "அபர்ணா பால முரளி பேசக்கூடிய "மதுரை ஸ்லாங் ஆகட்டும்! சூர்யா தன்னுடைய கணவர் என்றாலும் உங்க பிஸ்னஸ்க்கு எங்க பிஸ்னஸ் எந்தளவுக்கும் கொறஞ்சது இல்ல. என்று பேசுவதாகட்டும் படத்தில் பட்டைய கிளப்பியிருப்பார்.இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் படத்தில் இவர் பேசிய மதுரை ஸ்லாங்கிற்கு "மதுர காரய்ங்களே அட நம்ம உருப் பொண்ணுக கூட இந்த மாதிரி பேசாதுக! ஆனா இந்தப்புள்ள இவ்வளோ அழகா பேசுதேப்பா! என வியந்தார்கள்.படம் மட்டும் திரையரங்கில் வந்திருந்தால் மதுரைகாரயங்களே "பொம்மி கேரக்டருக்கு கட்அவுட்டே வச்சிருக்க வாய்ப்பு இருக்கு.அந்தளவுக்கு அவங்களுக்கு மட்டுமில்ல படம் பார்த்த எல்லாருக்கும் அந்த கேரக்டர் அவ்வளவு புடிச்சிருந்துச்சு.


ஒரு தடவை நேர்காணல் ஒன்றில் நடிகர் கருணாஸ் கூறியிருப்பார். அபர்ணா பால முரளியைப் பற்றி "நீ பாக்குறதுக்கு ஹோம்லிய இருக்கமா! உனக்கு கிளாமர் சீன்லாம் செட்டாவாது! பாக்குறதுக்கு நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்க! அடுத்த , அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கட்டும்! என்று கூறியிருப்பார்.


இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் "சூரரைப் போற்று படத்தை பார்த்த "90ஸ் கிட்ஸ்களாட்டும் , 2கே கிட்ஸ்களாகட்டும்! ச்சே  பொம்மி மாதிரி நமக்கும் ஒரு "லைஃப் பார்ட்னர் கெடச்சா நம்மளும் சூரரைப் போற்று சூர்யா மாதிரி "ஆகாசத்துலப் பறக்கலாம் என்று கனா கண்டு கொண்டுள்ளனர்.


இன்னும் நம்ம பொம்மி நெறய மூவிஸ்ல கமிட் ஆகி நம்மள "சந்தோசப்படுத்தனும்னு அவங்களோட பொறந்த நாளுல நாமும் கேட்டுக்குவோம்!!


"ஹேப்பி பர்த்டே மை டியர் பொம்மி!!!


ALSO READ : துபாயில் சிகிச்சைக்கு பின், சென்னை திரும்பினார் கேப்டன் விஜய்காந்த்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR