துபாயில் சிகிச்சைக்கு பின், சென்னை திரும்பினார் கேப்டன் விஜய்காந்த்..!!

நடிகர் கேப்டன் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2021, 08:49 AM IST
துபாயில் சிகிச்சைக்கு பின், சென்னை திரும்பினார் கேப்டன் விஜய்காந்த்..!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், 2014ம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிகிச்சைக்கு பிறகு, துபாயில் இருந்து சென்னை திரும்பினார். 

நடிகர் கேப்டன் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

முன்னதாக, சிகிச்சைக்கு முன், விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. அதை பார்த்த ரசிகர்களை மனம் மிகவும் வருத்தமடைந்தனர். அந்த புகைப்படத்தைப் பார்த்த அவருடைய ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் ‘எங்கள் கேப்டனா இது?’ என்று வருத்தம் தெரிவித்தனர்.

ALSO READ | செவிலியர்களுடன் படம் பார்த்த நடிகர் விஜயகாந்த்!

விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக அவரால் கணவர் விஜயகாந்துடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் மற்ற கட்சிகளின் தலைவர்கள் உடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். அதே நேரம், மக்கள் பிரச்சினைக்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியது. விஜயகாந்தின் ட்விட்டர் பதிவில், ''நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்'' என குறிப்பிட்டிருந்தார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News