மதுரை திரையரங்கில் வெளியான சூரரைப்போற்று!
மதுரை திரையரங்கில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி உள்ளது.
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று (Soorarai Potru) திரைப்படம் கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT-யில் வெளியானது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் நேரடியாக OTT-யில் வெளியாவதற்கு அடித்தளம் போட்டது இந்த படம் தான். இப்படம் 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.
ALSO READ | 'பேச்சிலர்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் கார்த்தி?
சூர்யாவின் படம் திரையரங்களில் வெளியாகாமல் OTT-யில் வெளியானதால் திரையரங்கு உரிமையாளர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இனிமேல் சூர்யா குடும்பத்தை சார்ந்த யார் படத்தையும் திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று அந்த சமயத்தில் போர்கொடி தூக்கினர். அதன்பின்பு பல்வேறு நடிகர்களின் படங்கள் OTT-யில் வர தொடங்கியது. சூரரைப்போற்று படம் சர்வேதச அளவில் பல்வேறு விருதுகளை வென்று இருந்தது. ஆஸ்கார் விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை திரையரங்கில் பார்க்கமுடியாமல் போனதே என்ற வருத்தம் சூர்யா ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. இந்த வருத்தத்தை தீர்க்கும் விதமாக இன்று மதுரையில் சூரரைப்போற்று படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மேல தாளத்துடன் காலை முதலே திரையரங்கை முற்றுகையிட்டுள்ளனர் சூர்யா ரசிகர்கள். மதுரையில் படம் வெளியானதை தொடர்ந்து மற்ற மாவட்டத்திலும் படத்தினை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
தற்போது சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக் வேளையில் உள்ளார். சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து வெளிவந்த சூர்யாவின் ஜெய் பீம் படமும் OTT-யில் வெளியானது. வரும் மார்ச் 10ம் தேதி நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
ALSO READ | உறுதியானது 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ரிலீஸ் தேதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR