பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திரையரங்கு மற்றும் OTTல் சில முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீசாக உள்ளன.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2022, 12:30 PM IST
  • எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் தற்போது இதே மாதத்தில் வேற தேதியில் வெளியாகவுள்ளது.
  • விக்ரம் நடிக்கும் 'மகான்' படமும், தனுஷ் நடிக்கும் 'மாறன்' படமும் விரைவில் OTTல் ரிலீசாக இருக்கிறது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!  title=

கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்" (Etharkum Thunindavan).  இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இப்படம் பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் தற்போது இதே மாதத்தில் வேற தேதியில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

ALSO READ | ஒரே நாளில் வெளியாகும் செல்வராகவனின் இரு படங்கள்!

அதனைத்தொடர்ந்து  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வலிமை' (Valimai) படம் சாமானிய மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு படமாக மாறிவிட்டது.  இதில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, குர்பானி நீதிபதி, யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் பற்றி அப்டேட்டே வெளியாகாமல் இருந்த இந்த நிலையில், ஒரு கட்டத்தில் தொடர்ந்து அப்டேட்டாக வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.  இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறிய நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.  தற்போது இந்த படம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் "ராதே ஷியாம்".  1970களில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகராக மாறிவிட்டார்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு, பின்னர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதுவும் தள்ளிப்போனது.  கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாகப்போகும் இப்படத்தை OTTல் வெளியிட அதிக தொகை பேசப்பட்டாலும் இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள காதல் கலந்த நகைச்சுவை படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".  இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  நானும் ரவுடி தான் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அமைந்திருக்கும் இந்த கூட்டணி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்நிலையில் இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

vjs

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’டான்’.  இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்த திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்கில் ரிலீசாக உள்ளது.  இதனையடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் 'மகான்' படமும், தனுஷ் நடிக்கும் 'மாறன்' படமும் அருண் விஜய் நடிக்கும் 'ஓ மை டாக்' படமும் கூடிய விரைவில் OTTல் ரிலீசாக இருக்கிறது.

ALSO READ | சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தியேட்டரா? OTT -ஆ? இதோ அப்டேட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News