SP Balasubrahmanyam Birthday: இன்று (ஜூன் 4) பாடும் நிலா பாலுவின் பிறந்தநாள்!! மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தின் 75 வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் அனைவரும் அவரை கனமான நெஞ்சத்தோடு நினைவுகூருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SPB-யின் பிறந்தநாளான இன்று, அவரது தீவிர ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரது பாடல்கள் மூலம் அவரது நினைவுகளை அசைபோட்ட வண்ணம் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர் நடித்த பல கதாப்பாத்திரங்கள் பற்றியும் ஆர்வத்தோடு பேசி வருகிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் SPB காலமானார். சில வாரங்கள் கோவிட் -19 உடன் போராடிய SPB, பின்னர் கொரோனா வைரசால் ஏற்பட்ட உடல் சிக்கல்களால் (Coronavirus Complications) இறந்தார்.


ஜீவ சுகம் பெற ராக நதியினில் நம்மை நீந்த வைத்த ஜீவன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரே பாடி இருப்பது போல, உடலுக்குத் தானே மரணம், உணர்விற்கு இல்லையே!! தேகத்திற்குத் தானே மரணம், இசைக்கு இல்லையே!! நம் மனம் உள்ள வரை அவர் பாடல் அதில் இருக்கும் என்பதுதான் உண்மை.


குரலை ஆண்டவன் அனைவருக்கும் தான் கொடுத்துள்ளான். ஆனால், அவருக்கு மட்டும் குழலையே குரலாய் படைத்தானோ? கோடியில் அவர் குரல் கேட்டாலும் குதூகலம் பிறக்கிறதே!!


ALSO READ: #IsaiAnjali to SPB: நீங்காத ரீங்காரம் நீதானே, இதயத்தில் இசையாலே இணைந்தாயே!!


நிலவைப் பார்த்தாலும், மலரைப் பார்த்தாலும், குழலைப் பார்த்தாலும், குழல் ஊதும் கண்ணனைப் பார்த்தாலும், அந்தி மழையைப் பார்த்தாலும், மலையோரம் வீசும் காற்றை சுவாசித்தாலும்…. எதிலும், எப்போதும் SPB-ன் நினைவு வருவதை தடுக்க முடியாது. 


75 ஆவது பிறந்தநாளில் ரசிகர்கள் நெஞ்சங்களை ஆட்கொண்ட SPB


சுமார் 50 ஆண்டு கால திரை வாழ்க்கையை கண்டுள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam), அவரது குரலால் அனைவர் மனங்களையும் மயக்கி கட்டிப்போட்டார் என்றே கூறலாம். பாடகர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என அவர் எடுத்துள்ள அவதாரங்கள் ஏராளம். தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் அவர் தன் திறமையைக் காட்டியுள்ளார். தனது திரை வாழ்க்கையில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் இந்த கானக் குயில்.


அவரது பாட்டும் நடிப்பும் ஒருபுறம் இருக்க, மக்கள் மனதில் நின்ற இன்னும் ஏராளமான குணங்கள் அவரிடம் உள்ளன. அவர் பெற்ற புகழின் அளவு எத்தனை பெரியதோ அத்தனை பெரியது அவரது அடக்கம். மிக எளிமையான ஒரு மனிதரான SPB, நேர்த்தியான நகைச்சுவை உணர்வையும் கொண்டவர். 


SPB ரசிகர்களின் சில ட்வீட்டுகள் உங்கள் பார்வைக்கு





ஆகஸ்ட் 2020 இல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 13 அன்று அவரது கோவிட் -19 பரிசோதனை எதிர்மறையாக வந்தபோதிலும், அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


மிக அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடி பதிவு செய்து SPB கின்னஸ் உலக சாதனை செய்துள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை (National Awards) ஆறு முறை வென்ற SPB, தெலுங்கு சினிமாவின் நந்தி விருதுகளை 25 முறை பெற்றுள்ளார். எஸ்.பி.பி.க்கு முறையே 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பத்மஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.


ALSO READ: Miss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR