எஸ்பிபி-யின் கடைசி இசை ஆல்பம் ’விஸ்ரூப தரிசனம்’ வெளியீடு
புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய விஸ்வரூப தரிசனம் என்ற 30 நிமிட ஆன்மீக ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் பின்னணி பாடல்களை பாடுவதில் மூடிசூடா மன்னனாக விளங்கிய எஸ்பி பாலசுப்ரமணியம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு திரைத்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய அவரின் உருவம் மறைந்தாலும், குரலால் கோடிக்கணக்கான மக்களை இன்றும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | ‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!
அவர் மறைவதற்கு முன்பு கடைசியாக சிம்போனி தயாரிப்பில் ’விஸ்வரூப தரிசனம்’ என்ற 30 நிமிட ஆன்மீகப் பாடல்களை பாடியுள்ளார். இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. பின்னணி பாடகர் உன்னிக்கிருஷணன் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த கேஎஸ்.ரகுநாதன் இசை அமைத்துள்ளார். குருநாத சித்தர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கிருஷ்ணரின் அவதாரத்தை கூறும் இந்தப் பாடலின் உருவாக்கம் குறித்து பேசிய ஸ்ரீஹரி, விஸ்ரூப தரிசனம் என்ற ஆன்மீக ஆல்பம் தயாரிக்கும் யோசனை 2017 ஆம் ஆண்டே தோன்றிவிட்டதாக தெரிவித்தார்.
சுமார் 8 மாதங்கள் பாடல்கள் வரிகள் பல்வேறு விவாதங்களுக்கு இடையே கவனமாக உருவாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், இசையமைக்கும் முன்பே எஸ்பிபி பாடல்களை ரெக்கார்டு செய்து கொடுத்துவிட்டதாக கூறினார். சில மாற்றங்கள் தேவை என அவரிடம் கூறியபோது, ராகங்களின் அடிப்படையில் இரண்டு விதமாகவும் பாடிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ள ஹரி, பின்னணி இசை இல்லாமல் இந்தப் பாடலை பதிவு செய்யாமல் இருந்திருந்தால் இப்போது இந்த படைப்பை அவரது குரலில் கேட்டு இருக்கும் வாய்ப்பு அமைந்திருக்காது என்றும் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | இயக்குநர் சங்கர் மகள் அதிதி சங்கரின் கிரஷ் இந்த நடிகராம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR