எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமாக சபரிமலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டி சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டி சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் (Hospital Statement) நேற்று புதிய அறிக்கையை வெளியிட்டது.
ALSO READ | பாடகர் SPB-யின் கொரோனா பாதிப்புக்கு நான் தான் காரணமா? பிரபல பாடகி விளக்கம்
அதேநேரத்தில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும், அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் பலர் வெகுஜன பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர் நலம் பெற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சிலர் கோயில் முன் உள்ள கொடிமரத்தின் அருகே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சங்கராபரணம் எனும் பாடலை வாசித்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தித்தனர். இதன் பின்னர் கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜை சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்டது.
ALSO READ | இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்....பிரபல நடிகர் ட்வீட்....
74 வயதுடைய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று (COVID-19) காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.