ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக ராஜமௌலி (SS Rajamouli), ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள  இந்தப் படம் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்ற மாத தொடக்கத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக் குழுவினர்களால் வெளியிடப்பட்டது. படத்தை ட்ரெய்லரை கீழே காணலாம். 



 


இப்போது புரொடக்ஷன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சிங்கிள்கள் வெளியிடப்பட்ட நிலையில், சென்ற மாத இறுதியில்,  ‘உயிரே’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 


ALSO READ | பிரமாண்டம்! 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு


இதில் இயக்குநர் ராஜமௌலி (Director SS Rajamouli) மற்றும் லைக்கா புரொடக்ஷன் சார்பில் தமிழ் குமரன், டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் தானய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டனர். அப்போது பேசிய லைக்கா புரோடக்ஷன் தமிழ்குமரன், உலகளவில் பிரம்மாண்ட படைப்பாக ஆர்.ஆர்.ஆர் இருக்கும் எனக் கூறினார். இதுபோல் இன்னும் பல படைப்புகள் தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் படம் தயாராகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. 


ALSO READ |  ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR