தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.  'நானே வருவேன்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.  இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார்.  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான முதல் படமான 'ராக்கி' ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தது, அதன்பின்னர் அவரது இயக்கத்தில் அடுத்ததாக செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'சாணி காயிதம்' படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது தனது மூன்றாவது படத்தில் தனுஷை வைத்து இயக்குகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 6வது முறையாக விஜய்யுடன் இணையப்போகும் நடிகர்!


இப்படம் 1930களின் காலகட்டத்தில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில் இப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, 'கேப்டன் மில்லர்' படத்தில் சந்தீப் கிஷன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' படத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.  



விரைவில் இப்படத்தில் நடிக்கப்போகும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் மற்றும் இதர விவரங்கள் வெளியாகும்.  சந்தீப் கிஷன் பான் இந்திய திரைப்படமான 'மைக்கேல்' படத்தில் நடித்துள்ளார், இந்த ஆக்ஷன் திரைப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார் மற்றும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் படிக்க | விஜய்க்கு அபராதம் - தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ