6வது முறையாக விஜய்யுடன் இணையப்போகும் நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப்போகும் 'தளபதி 67' படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 17, 2022, 06:47 AM IST
  • தளபதி 67 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
  • தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
  • இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
6வது முறையாக விஜய்யுடன் இணையப்போகும் நடிகர்!  title=

சமீப காலமாக ரசிகர்கள் கொண்டாடி வரும் ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான், 'விக்ரம்' படத்தின் வெற்றியில் மூழ்கியிருந்த இயக்குனர் தற்போது தனது அடுத்த படத்திற்கான கதையை உருவாக்குவதில் பிசியாக இருந்து வருகிறார்.  ஏற்கனவே லோகேஷ்-விஜய் காம்போவில் வெளியான 'மாஸ்டர்' வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் தளபதி 67 படம் மூலம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.  தளபதி 67 மூலம் லோகேஷ் - விஜய் இணையப்போவதாக செய்திகள் வெளியானத்திலிருந்தே ரசிகர்கள் பலரும் இந்த படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.  வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் வாரிசு படத்திற்கு கூட ரசிகர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டவில்லை, 'தளபதி 67' பற்றி தான் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | “நீங்கள் இன்னொரு தாய்”... நயன் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் உருக்கமான வாழ்த்து

இந்நிலையில் தளபதி 67 படத்தில் யோகி பாபு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் படுபிஸியாக இருக்கும் காமெடி நடிகர் தான் யோகி பாபு, இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  தளபதி 67 படத்திற்கு இயக்குனர் லோகேஷ் பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் நிலையில் யோகி பாபுவை தேர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.  தான் தளபதி 67 படத்தில் நடிக்கப்போவதை நகைச்சுவை நடிகர் யோகி பாபுவே சில தகவல்களின் மூலம் உணர்த்தியுள்ளார்.  இதுகுறித்து யோகி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு அவரது படத்தில் நடிக்குமாறு கேட்டதாகவும் அதற்கு தான் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது யோகி பாபு விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார், ஏற்கனவே இவர் விஜய்யுடன் இணைந்து மெர்சல், பிகில், சர்க்கார் மற்றும் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் இவர் நடித்தால் இது யோகி பாபுவுக்கு, விஜய்யுடன் இணையும் ஆறாவது படமாகும்.  இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் படத்தின் பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ராஜ்கமல் நிறுவனம் விரைவில் 100வது படத்தை தயாரிக்க வேண்டும்: கமல்ஹாசனின் ஆசை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News