சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - எஸ்.பி.பி காம்போவில், அண்ணாத்த படத்தின் முதல் பாடல் சற்று முன்னர் ரிலீஸ் ஆனது. ரஜினி பட பாடல் என்பதாலும், மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதாலும், இந்த பாடல் வெளியீட்டிற்காக மக்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், டி. இமாம் இசையில் தற்போது வெளிவந்துள்ள பாடல், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. ரஜினி எஸ்.பி.பி காம்போவில் இதுவரை பல சூப்பர்ஹிட் பாடல்கள் வெளிவந்துள்ளன. தற்போது கடைசியாக எஸ்.பி.பி ரஜினிக்காக பாடியுள்ள இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. 



சமீப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துயுள்ள படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் ‘அண்ணாத்த’ (Annaatthe) முக்கிய இடத்தில் உள்ளது.


ALSO READ: அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ்: எஸ்.பி.பி. குரலில் கடைசியாக ஒரு இண்ட்ரோ பாடல்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்து விட்டது. இந்த படத்தில் ரஜினி ஒரு கிராமத் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதால், ரசிகர்கள் இந்த வேடத்தில் அவரைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.


இப்படத்திற்கு டி இமாம் இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இமாம், மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தை வைத்து, அவரது மறைவுக்கு முன்னரே படத்தின் இண்ட்ரோ பாடலைப் பதிவு செய்திருந்தார். மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலில் வெளிவரும் கடைசி பாடலாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.


முன்னதாக, SPB இன் முதல் நினைவு நாளான செப்டம்பர் 25 அன்று எஸ்.பி.பி குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த பாடல் வெளியிடப்படும் என கூறப்பட்டது. எனினும், SPB இன் முதல் நினைவு நாளுக்குப் பிறகு பாடல் வெளியிடப்படும் என்று பின்னர் கூறப்பட்டது.


இந்த பாடல் ஒரு கொண்டாட்டப் பாடலாக இருக்கும் என்றும் இது 'அண்ணாத்த' படத்தின் தொடக்கப் பாடல் என்றும் டி இமாம் ஒரு முன்னர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். 


அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். குடும்ப பொழுதுபோக்கு படமான அண்ணாத்த, ரசிகர்களுக்கான மிகப்பெரிய தீபாவளி விருந்தாக இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.


ALSO READ: சரவெடி: அண்ணாத்த செகண்ட் லுக் ரிலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR