எஸ்.பி பாலசுப்பிரமணியம்: இன்னுயிர் நீத்தாலும், நீங்காத தடம் பதித்த பாடும் நிலா பாலு

பாடும் நிலா எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து திரையுலகம் அமாவாசையான நாள் இன்று

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2021, 10:21 AM IST
  • தடம் பதித்த பாடும் நிலா பாலு
  • கொரோனாவுக்கு பலியான நாள் இன்று
  • கோடிக்கணக்கானவர்கள் எஸ்.பி.பிக்கு அஞ்சலி
 எஸ்.பி பாலசுப்பிரமணியம்: இன்னுயிர் நீத்தாலும், நீங்காத தடம் பதித்த பாடும் நிலா பாலு title=

பின்னணிப் பாடகராக மட்டுமல்ல, மக்களின் மனதை வருடிச் செல்லும் குரலுக்கு சொந்தக்காரர் மெளனித்து பூமியில் அடங்கிய நாள் இன்று. பாடும் நிலா எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து திரையுலகம் அமாவாசையான நாள் இன்று.

கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் SPB காலமானார். சில வாரங்கள் கோவிட் -19 உடன் போராடிய SPB, பின்னர் கொரோனா வைரசால் ஏற்பட்ட உடல் சிக்கல்களால் (Coronavirus Complications) இறந்தார்.

ராக நதியினில் நம்மை நீந்த வைத்த ஜீவன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரே பாடி இருப்பது போல, உடலுக்குத் தானே மரணம், உணர்விற்கு இல்லையே!! தேகத்திற்குத் தானே மரணம், இசைக்கு இல்லையே!! நம் மனம் உள்ள வரை அவர் பாடல் அதில் இருக்கும் என்பதுதான் உண்மை.

கொரோனா என்ற ரூபத்தில் கொடுங்காலன், பாடலரசனை வாரிச் சென்ற இந்த தினத்தில் பாலசுப்ரமணியம் என்ற எஸ்.பி.பிக்கு சமூக ஊடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ என்று அனைவரையும் முகாரி பாடச் செய்துவிட்டு காற்றோடு கலந்த எஸ்.பிபியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. 

1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் பாடிய பாடலில் அவரின் குரலில் சொக்கிப் போன ரசிகர்கள் இன்றும் அவரது மாயக் குரலின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.

காதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம் என பல்வேறு உணர்வுகளை தனது இனிய குரலில் பாடிய இசைக்குயில் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் வாய்ந்தவை என்பது சத்தியமான உண்மை. நிலவும், மலரும்,இருக்கும் வரை அந்தி மழையாய் பாடும் நிலாவின் நினைவு எப்போதும் நம்முடனே நீங்காமல் இடம் பெற்று இருக்கும்.

Also Read | நீங்காத ரீங்காரம் நீதானே, இதயத்தில் இசையாலே இணைந்தாயே!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News