அண்ணாத்த படத்தின் First Look போஸ்டர்; கசிந்த முக்கிய தகவல்

ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2021, 11:17 AM IST
அண்ணாத்த படத்தின் First Look போஸ்டர்; கசிந்த முக்கிய தகவல் title=

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மேலும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்தின் (Rajinikanth) அண்ணாத்தே (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர்.

ALSO READ | பாலிவுட்டை மிஞ்சும் கோலிவுட்... 1000 கோடி வசூலில் தமிழ் சினிமா..!

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டு மீண்டும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

இதற்கிடையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Rajinikanth: 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி ரிலீஸ்; படக்குழு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News