திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் சலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்து விநாயகர் முருகர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து சென்றார், அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் முட்டி மோதிக் கொண்டு ரஜினியை பார்ப்பதற்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அப்போது ரஜினியுடன் வருகை தந்தவர்களும் கோவில் ஊழியர்களும் பாதுகாப்பாக ரஜினியை கோவிலில் இருந்து வெளியே அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பழம்பெரும் நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் ரஜினிகாந்த்! யார் தெரியுமா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் தயாராகி வரும் லால் சலாம் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரரை வழிபடுவதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வெளியே வரும்போது தகவல் அறிந்து கோயிலுக்குள் வந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் முட்டி மோதிக் கொண்டு ரஜினியை பார்க்க குவிந்தனர், அப்போது ரஜினி உடன் வந்தவர்களும் கோயில் ஊழியர்களும் பாதுகாப்பான முறையில் ரஜினியை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.  முன்னதாக பாண்டிச்சேரியில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்றது.  இரண்டு ஹீரோக்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருக்கு வழிகாட்டும் மொய்தீன் பாய் என்ற சக்திவாய்ந்த முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார்.



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இனி வரும் நாட்களில் இந்த படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.  இந்த மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'ஜெயிலர்' படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆடம்பரமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மிகப்பெரிய பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக கொண்டு 'ஜெயிலர்' பட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 'ஜெயிலர்' படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.  ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களையும் திரையில் பார்க்க சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  


மேலும் படிக்க | பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி & அமிதாப் பச்சன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ