லோகேஷ் - சூர்யா கூட்டணியில் உருவாகும் `இரும்பு கை மாயாவி` - தயாரிப்பாளர் உறுதி!
`இரும்பு கை மாயாவி` படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' போன்ற சிறப்பான படங்களை இயக்கிய லோகேஷுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக சமீபத்திய வெளியீடான 'விக்ரம்' படம் அமைந்துள்ளது. இவர் சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்கிற படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது, ஆனால் அதுகுறித்த அடுத்தகட்ட தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சூர்யாவை வைத்து ஒரு புதிய திட்டத்தை தொடங்க ஆலோசித்தார். மாநகரம் படத்திற்கு பின்னர் லோகேஷ்-சூர்யாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.
மேலும் படிக்க | உண்மையாகவே திரையை தீப்பிடிக்க வைத்த 'விக்ரம்' படம்!
'கைதி' படம் நல்ல வெற்றியை பெற்றது, அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். அதேபோல சமீபத்தில் வெளியான விக்ரம் படமும் வெற்றிபெற்றது, ஆனால் சூர்யாவுடன் கூட்டணி அமைப்பதாக சொன்ன படம் மட்டும் இன்னும் வரவில்லை. இதுகுறித்து லோகேஷிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்தவர், நான் அப்போது சூர்யாவை வைத்து படமெடுக்க தயங்கினேன், இதுகுறித்து சூர்யாவிடமும், தயாரிப்பாளரிடமும் தெரிவித்தேன், அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர் தான் கைதி படத்தை எடுத்தேன். விரைவில் சூர்யாவை வைத்து படம் பண்ணுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தை உலகளாவிய திட்டமாக கொண்டுசெல்ல நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில் இப்படத்தின் பணிகளை தொடங்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். லோகேஷின் 'விக்ரம்' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யா தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
மேலும் படிக்க | அரசியலிலிருந்து விலகும் கமல்ஹாசன்? - Press Meet-இல் சொன்னது என்ன?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR