கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளவர் ‍சூர்யா. ஒரு ஆண்டிற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து வந்த அவர், 2016ஆம் ஆண்டு ‘24’ படத்தில் மட்டும் நடித்தார். ஆனால், இப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களை சரியாக போய் சேரவில்லை எனக்கூறப்பட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக எதிர்பார்ப்பு:


பெரிய ஹீரோக்களின் புதுமையான படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகும். உதாரணமாக நடிகர் விஜய்யின் புலி, சுறா ஆகிய படங்கள் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், ரிலீசானதும் எக்க சக்க நெகடிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சறுக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கும் இதே நிலைதான். இது போன்று பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானதுதான் 24. சூர்யா முதன்முறையாக 3 வேடங்களில் நடித்திருந்த படம் இது. 


டைம் டிராவல் கதையை மையமாக வைத்து சையின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாகியிருந்தது. சயின்ஸ் பிக்ஷன் கதைகள் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் போய் சேர பெரிதும் வாய்ப்புகள் இல்லை என்பது கூட இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததற்கு ஒரு காரணம். 


மேலும் படிக்க | சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா... அவரே போட்ட பதிவு!


லாஜிக் ஓட்டைகள்:


24 திரைப்படத்தில் நிறைய கவனிக்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும் அது பெரிய ரசிகர் கூட்டத்தை போய் சேரவில்லை. மேலும், படத்திலும் "இதெல்லாம் நம்புறா மாதிரியா‌‌ங்க இருக்கு.." என்பது போல இருந்தது. 24 மணிநேரம் முன்னாலும் பின்னாலும் போகும் ஒரு டைம் ட்ராவல் கடிகாரத்தை கண்டுபிடிக்க அப்பா சூர்யாவாக வரும் சேதுராமனுக்கு பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், அவரது பிள்ளை சூர்யாவாக வரும் மணிகண்டனுக்கு அந்த கடிகாரத்தில் பல ஆண்டுகள் எந்த நேரத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்க கூடிய அம்சத்தை இணைப்பதற்கு, ஒரே ஒருநாள்தான் எடுக்கும். ஏனென்றால் அவர் பேசிக்கலி ஒரு வாட்ச் மெக்கானிக் என்ற மொக்கையான காரணத்தை கொடுத்திருப்பர்.


விக்ரம் நிராகரித்த படம்!


இந்த கதையில் நடிப்பதற்கு, 2009ஆம் ஆண்டு சியான் விக்ரம்தான் ஹீரோவாக நிர்ணயிக்கப்பட்டார். ஆனால், படத்தின் இயக்குநர் அடிக்கடி கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்தததால் அதிலிருந்து விக்ரம் விலகிக்கொண்டார். மேலும், ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு இலியானா தேர்வு செய்யப்பட்டாராம். அவராலும் இதில் நடிக்க முடியாமல் போனது. ஹாரிஸ் ஜெராஜ் இப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். ஆனால், 2016ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இப்படத்தில் அனைத்துமே தலைகீழாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கதையை சற்று மெருகேற்றி 2016ஆம் ஆண்டில் புதுபடமாக வெளியிட்டதாலோ என்னவாே படம் அந்தளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. 


இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு?


24 படம் மேக்கிங்களில் இருந்த போதே, இதன் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இப்படத்தில் சூர்யா பாராக்ளைடிங் செய்வது போன்ற காட்சி இடம் பெறுவதாக இருந்தது. ஆனால், எடிட்டிங்கின் போது அக்காட்சியை நீக்கிவிட்டனர். அந்த காட்சி, இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதன் இரண்டாம் பாகத்திற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 


7 வருடங்களுக்கு பிறகு…


வசூல் வகையில் பார்க்க போனால், 24 திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். வெளிநாடுகளிலும் நன்றாகவே இப்படம் வரவேற்பினை பெற்றது. சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய இப்படம், 100 கோடி வரை வசூல் செய்துள்ளது. 24 படத்தின் 7ஆம் ஆண்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். அதில் சிலர், இப்படம் மோஸ்ட் அண்டர்ரேட்டட் என்றும் ஒரு வைரத்தை பாராட்ட நாம் தவறிவிட்டோம் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் இதே கதிதான். அவ்வளவு நல்ல ஸ்கிரீன் ப்ளே இருந்தும், ரிலீஸாகி 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் இப்படத்தின் அருமை எல்லோருக்கும் புரிந்தது. இதே போல பல தமிழ் படங்கள் வெளியான போது சக்ஸஸ் ஆகாமல் பல வருடங்களுக்கு பின்னர் புகழப்படுகிறது. 


மேலும் படிக்க | விக்ரமின் வீடு வரை வந்த ரசிகர்..ஷாக்கான சியான்..வைரலாகும் ட்விட்டர் பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ