சூர்யாவுக்கு ஜோ கொடுத்த கிஃப்ட்- சில்லுனு ஒரு காதல்

15 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி நடிகர் சூர்யாவுக்கு ஜோதிகா அழகான பரிசளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 07:59 AM IST
சூர்யாவுக்கு ஜோ கொடுத்த கிஃப்ட்- சில்லுனு ஒரு காதல் title=

தமிழக இளைஞர்களுக்கு பிடித்த நட்சத்திர தம்பதியர்களில் ஒருவர் சூர்யா - ஜோதிகா. கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி அன்று காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. ஆனால், சூர்யா அதே பேரன்போடு மேடைக்கு மேடை ஜோதிகா மீதான பெருங்காதலை வெளிப்படுத்தி வருகிறார். 

ஜோதிகா (Jyothika) தனக்கு எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை பல்வேறு மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார் இந்த நிலையில், 15 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி சூர்யாவை (Suriya) ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசளித்துள்ளார் நடிகை ஜோதிகா. இது தொடர்பாக நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது., சரியான நபரை சந்திப்பது என்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாக மாற வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் அதே நபருடன் ஒவ்வொரு நாளும், மீண்டும் மீண்டும் காதலில் விழுவது என்பது என்னையும் மீறி நடந்த செயல். அவர் அவராகவே இருப்பதால்தான் அது சாத்தியமானது. என் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக, எனக்கு நல்ல கணவராக, அப்பாவுக்கு, சில நேரங்களில் எனது அம்மாவாகவும் இருப்பவருக்கு, மிக முக்கியமாக என் வாழ்நாள் நண்பனுக்கு, என் சிங்கத்திற்கு எனது சிறிய திருமணநாள் பரிசு என்று காதலுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Also Read | நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

 

மறுபுறம் நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது., நீ எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் ஜோ. உங்கள் அனைவரது அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருடைய முதல் எழுத்தைக் கொண்டே 2டி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, ஜாக்பாட், ராட்சசி போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஜோதிகா உடன்பிறப்பே படத்தில் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

Also Read | IMDb தரவரிசை: டாப் 3 இல் இடம்பெற்ற சூரரைப் போற்று

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News