உண்மை கதையில் மீண்டும் நடிக்கும் சூர்யா
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் படத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவிருக்கிறார்.
மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் சூர்யாவை வைத்து கடந்த 2020ஆம் ஆண்டு இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா உண்மைக் கதை, நாவல்கள் ஆகியவைகளை தழுவி எழுதப்படும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
அப்படி அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படமும் பெரும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை வெற்றிமாறன் படமாக்க இருக்கிறார். அதிலும் சூர்யாவே கதாநாயகனாக நடித்துவருகிறார். இதற்கிடையே அவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்திருந்தார். அப்படமும் கிட்டத்தட்ட பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தழுவியே எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவுடன் இணையவிருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சுதா, “சூர்யாவின் அடுத்த படம் பயோபிக்காக இருக்காது. ஆனால் உண்மை சம்பவத்தின் தழுவலாக அந்தப் படம் இருக்கும்” என்று கூறினார்.
மேலும் படிக்க | அரசியல் தலைவர்களை விமர்சிக்கக்கூடாது’ - விஜய் அறிக்கையின் பின்னணி
இதன் மூலம் சூர்யாவின் அடுத்தப் படமும் உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் படம் என உறுதியாகியுள்ளது. ஆனால், இந்தப் படமானது எந்த சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சுதா கூறவில்லை.
சமீபமாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உண்மை சம்பவங்களை தழுவி படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. நடந்ததை எந்தவித சமரசமுமின்றி ரசிகர்களுக்கு கொண்டு சென்றால் உண்மை சம்பவத்தை தழுவி படம் எடுப்பது ஆரோக்கியமான ஒன்றே என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இளைய தளபதி நடிகர் விஜய் நேருக்கு நேர் சந்திப்பு
மேலும், சூர்யா போல் மற்ற நடிகர்களும் உண்மை சம்பவத்தை தழுவியும், புத்தகங்களை தழுவியும் எடுக்கப்படும் கதைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தால் நிச்சயம் இந்தப் போக்கு தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR