இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பிவிபி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கும் அவரது சகோதரருக்கும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கார்த்தியையும், சமந்தாவையும் வைத்து எண்ணி ஏழு நாள் என்ற படத்தை இயக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அமீர்கானுக்கு சப்போர்ட் செய்ததால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்தது சிக்கல்
அதற்காக அவர் நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசம்காக எண்ணி ஏழு நாள் படம் சில பிரச்னைகளால் ஆரம்பிக்கப்படாமல் போக பிவிபி நிறுவனம் லிங்குசாமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அப்போது லிங்குசாமி காசோலையை கொடுத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் பணம் இல்லாததால் லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
மேலும் படிக்க | சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் ஃபாலோ பண்ணுங்க - தமிழிசை வேண்டுகோள்
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமென லிங்குசாமி தரப்பு கூறியுள்ளார். லிங்குசாமி கடைசியாக தி வாரியர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் படிக்க | மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ