கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பினை பெறாமால் ஏமாற்றியது. பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. ஆனால், இந்த ஆண்டு அப்படி இருக்கப்போவது இல்லை. இந்த ஜூன் மாதத்திலேயே பல முக்கிய ஹீரோக்களின் படங்கள் சில வெளியாகவுள்ளன. அவை என்னென்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்:


ஆர்யா, சித்தி இட்னானி ஆகியோர் நடித்துள்ள படம், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். கிராமத்து கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை முத்தையா இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம், இன்று (ஜூன்2) வெளியாகியுள்ளது.


வீரன்:


இண்டிபெண்டண்ட் இசைக்கலைஞராக இருந்து இப்போது ஹீரோவாக வலம் வருபவர், ஹிப் ஹாப் தமிழா ஆதி. என்னதான் இவரது பல படங்கள் தோல்வியுற்றாலும் இவர் சினிமாவில் இருந்து பின்வாங்கவில்லை. இவர் அடுத்து நடித்திருக்கும் படம், வீரன். இதில் வினய் ராய், அதிரா ராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.கே சரவணன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். படம் (ஜூன் 2) இன்று வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | ‘நல்ல நண்பன் நீ..’விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா வெளியிட்ட எமோஷனல் பதிவு..!


திருத்தம்:


இயக்குநர் ஸ்ரீநிவாசனின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம், திருத்தம். இதில், ஜெகன் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். பல புதுமுகங்களை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


டக்கர்:


சித்தார்த், நடிப்பில் உருவாகியுள்ள படம், டக்கர். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இதனை, கார்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் படம் தயாரித்து வழங்கப்படுகிறது. இப்படம் ஜூன் 9 அன்று வெளியாகிறது.


போர் தொழில்:


சரத் குமார், அசோக் செல்வனின் நடிப்பில் ஜூன் 9அன்று வெளியாகவுள்ள படம், போர் தொழில். இந்த படத்தினை விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


ஆதி புருஷ்:


மெகா பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம், ஆதி புருஷ். க்ருத்தி சனோன், பிரபாஸ், சயிஃப் அலி கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எப்போதோ ரிலீஸாக வேண்டிய இப்படம், சில தொழில் நுட்ப வேலைகள் காரணமாக ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இப்படம் இம்மாதம் 16 அன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தண்டட்டி:


பிரபல நடிகர் பசுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம், தண்டட்டி. இந்த படத்தில், விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராம் சங்கைய்ய இந்த படத்தை இயக்கி இருக்கிறார். படம் இம்மாதம் 23 அன்று திரைக்கு வருகிறது.


மாமன்னன் ஜூன் ரிலீஸ்?


உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத்  ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், மாமன்னன். இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. மாமன்னன் படமும், இந்த மாதத்திலேயே ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த ஆண்டு செம வேட்டை..


2023ஆம் ஆண்டின் முதல் பாதி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காெஞ்சம் மந்தமாக போனாலும், இதன் அடுத்தபாதி அப்படியே ஆபோசிட்டாக சூடு பிடிக்க உள்ளது. லியோ, ஜெயிலர், ஜவான், என பல்வேறு படங்கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன. முக்கியமாக, இவை எல்லாமே முக்கிய ஹீரோக்கள் நடித்துள்ள படங்கள் என்பது குறப்பிடத்தக்கது. மேலும், இந்த மாதத்திலேயே பெரிய படங்களின் அப்டேட்டுகளும் வெளிவர காத்துக்கிடக்கின்றன. லியோ, தங்கலான் ஆகிய படங்களின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பும் இந்த மாதத்தில் தொடங்க உள்ளது. 


மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ