காதலோடு இயற்கையை இணைத்த கில்லாடி இயக்குநர் மணிரத்னம் சினிமாவற்குள் வந்தது எப்படி?

HBD Mani Ratnam: தமிழ் சினிமாவிற்கு அடையாளமாய் விளங்கும் இயக்குநர் மணிரத்னம். இவருக்கு இன்று பிறந்தநாள். மணிரத்னம் இயக்கிய சில மாஸ்டர் பீஸ் படங்களை பார்க்கலாமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 2, 2023, 09:11 AM IST
  • இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் இன்று.
  • பல மாஸ்டர் பீஸ் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.
  • இவர் சினிமாவிற்கு வந்தது எப்படி தெரியுமா?
காதலோடு இயற்கையை இணைத்த கில்லாடி இயக்குநர் மணிரத்னம் சினிமாவற்குள் வந்தது எப்படி? title=

கோலிவுட் இயக்குநர்களில், ஒரு வகையினர் காதல் படங்களாக எடுப்பர், இன்னொரு வகையினர் கல்ட் (Cult) படங்களாக எடுப்பர், இன்னும் சிலரோ சண்டை-விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த படங்களாக எடுப்பர். ஆனால், இந்த அனைத்து வகை படங்களையும் எடுத்தாலும் அதில் இருக்கும் ஒவ்வாரு அம்சங்களையும் அழகாக காட்டும் இயக்குநர்களுள் வெகு சிலரே உள்ளனர். அந்த ஒரு சிலருள் ஒருவர், நம்ம மணிரத்னம்.

தனித்துவமான இயக்கம்..

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த இயக்குநர்கள், இப்போதைய இயக்குநர்கள் தங்களத திறமையால் ஓரம் கட்டி விட்டனர். ஆனால் மணிரத்னமோ ஆண்டுகள் பல உருண்டோடியும் காலத்தால் அழிக்க முடியாத ‘காதல்’ என்ற ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு புதுப்புது விதத்தில் அந்த காதலை காட்டி இன்றளவும் வெற்றி இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரது படங்கள் சமயங்களில் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தில் இடம் பெற்றுள்ள காடசிக்காகவும், திரைக்கதை திறமைக்காகவும் பாராட்டப்படுபவர், மணிரத்னம். 

மேலும் படிக்க | பாரதிராஜாவின் மகன் இயக்கும் படத்தில் விபத்து..! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த படக்குழு..!

ஆரம்பத்தில் தோல்வி..

இப்போது உள்ள இயக்குநர்களை “சினிமாவின் மீது எப்படி ஆர்வம் வந்தது?” என்று கேட்டால், “சிறுவயதிலிருந்தே இதுதான் என் கனவு..” என்பார்கள். ஆனால் அப்படி சினிமா ஆசையே இல்லாமல் வளர்ந்தவர் மணிரத்னம். இவரது இயற்பெயர் கோபால ரத்ன சுப்ரமணியம். சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்டார். சுயதொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்த இவர், ஏதாே ஒரு ஈர்பினால் கன்னடத்தில் சில படங்களை இயக்கினார். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. மேலும் சில படங்களை இயக்கினார், அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இவரை துணை தயாரிப்பாளராக ஏற்றுக்கொள்ளவும் யாரும் ரெடியாக இல்லை. மணிரத்னம் தான் இயக்கிய 5ஆவது படமான மெளனராகம் மூலமாகத்தான் இவரது பெயரை பலருக்கு தெரிய ஆரம்பித்தது. பிறகு என்ன? எடுத்ததெல்லாம் ஏற்றம்தான்! இவரது பல படங்கள் இன்று தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கும் அடையாளமாக திகழ்கின்றன. அதில் சில படங்களை பார்போமா? 

தளபதி:

ரஜினிகாந்த், மம்மூட்டி, ஷோபனா, அரவிந்த் சாமி உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. தாயை இழந்து வளரும் ஹீராே, அவனுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் தாதா. ஹீரோவிற்கு அக்ரஹாரத்து பெண்ணுடன் காதல், பல வருடங்களுக்கு முன் தொலைத்த தாயை கண்டுபிடிக்கிறான். பாசப்போராட்டம், இடையே போலீசுடனும் போராட்டம். இப்படி பல விதமாக பினைக்கப்பட்ட ஒரு கதையை காதல், பாசம், கோபம், வெறி போன்ற பல வகையான எமோஷனல் காட்சிகளை வைத்து எடுத்திருப்பார், மணிரத்னம். குறிப்பாக, நாயகன் காதலில் விழும் காட்சி மற்றும் தனது அம்மாவை கோவில் பார்க்கும் காட்சி போன்றவை காலத்தால் அழியாத சுவடாக மனதில் பதிந்துள்ளது.

உயிரே:

இந்தியில் ‘தில் சே’ என்ற பெயரிலும் தமிழில் உயிரே என்ற பெயரிலும் காதல் படத்தை இயக்கினார், மணிரத்னம். ஷாருக்கான்-மனிஷா கொய்ராலா நாயகன்-நாயகியாக நடித்திருந்தனர். இதில், நாயகியை முதன் முறையாக பார்க்கும் நாயகன் பார்த்த கணத்திலேயே காதலில் விழுகிறான். அந்த காட்சியின் போது நாயகி கையில் வைத்திருந்த குடை பறப்பது, காற்று அடிப்பது, மழை பெய்வது என இயற்கையோடு காதல் உணர்வை இணைத்திருப்பார் மணி. இந்த படத்தின் மூலம், கலங்க வைக்கும் காதல் படங்களை எடுப்பதில் கில்லாடி என நிரூபித்திருப்பார், மணிரத்னம. 

அஞ்சலி:

மனநலத்திலும் உடல் நலத்திலும் பிரச்சனை உள்ள குழந்தை, அந்த குழந்தையை குடும்பத்தினருக்கே தெரியாமல் வளர்க்கிறார், தந்தை. உண்மை தெரிந்ததும், குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் தனது மழலை சிரிப்பாலும் மழலை மனதாலும் குடும்பத்தினரை கட்டிப்போடுகிறாள் அஞ்சலி. இந்த அழகான கதையை, அற்புதமான திரைக்கதையினால் பலரை அழ வைத்திருப்பார் மணிரத்னம். இன்றும இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பதில் ஐயமில்லை. 

காதல் படங்கள்:

அன்றைய இளசுகளும் இன்றைய பொடிசுகளும் விரும்பி பார்க்கும் காதல் படங்களுள் ஒன்று, அலைபாயுதே. “ஷக்தி நீ அழகா இருக்கேனு நினைக்கல…” என்று தொடங்களும் டைலாக்கை யாரால் மறக்க முடியும்? இப்படி பலருக்கு காதலை கற்றுத்தந்த அலைபாயுதே படத்தை இயக்கி இளைஞர்களின் மனங்களில் நின்றவர், மணிரத்னம். இதற்கு முன்னர் ரோஜா மற்றும் பாம்பே ஆகிய படங்களின் மூலமாகவும் பலருக்குள் காதல் உணர்வை கடத்தியிருந்தார். இந்த இரண்டு படங்களிலும் காதலை பற்றி மட்டுமன்று நாடு குறித்தும் அதில் உள்ள மதம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் பேசியிருப்பார். 

இன்னும் பல மாஸ்டர் பீஸ் படங்கள்..

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கும் விதத்தில் நேர்த்தியையும் நிதானத்தையும் முதிர்ச்சியையும் காட்டுபவர், மணிரத்னம். இலங்கை தமிழர்களின் கதையை காட்டடிய கண்ணத்தில் முத்தமிட்டாய், அரசியல் நிதர்சனத்தை காட்டிய இருவர் மற்றும் ஆயுத எழுத்து, கேங்க்ஸ்டர் கதையான நாயகன் மற்றும் செக்க சிவந்த வானம் இப்படி மணிரத்னமின் எந்த படங்களை எடுத்தாலும் அதில் அவரது டச் இருக்கும். 

மேலும் படிக்க | விரைவில் திருமண வாழ்க்கையில் நுழையும் பிரபல தென்னிந்திய காதல் ஜோடி..ஜூன் 9 நிச்சயதார்த்தமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News