2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் திரைத்துறையில் சாதனை படைத்த 201 பேருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜய் சேதுபதி, பிரபுதேவா, சந்தானம், நடிகை ப்ரியாமணி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. கலைத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது கடந்த 2010ம் ஆண்டு கடைசியாக வழங்கப்பட்டது. அதன்பின், கடந்த 8 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாத நிலையில், 2011 முதல் 2018ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகளை சேர்த்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 


நடிகர் விஜய் சேதுபதி, கார்த்தி, சந்தானம், தம்பி ராமையா, பொன்வண்ணன், நடிகை ப்ரியாமணி குட்டி பத்மினி, இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபல திரைத்துறையினர் இடம்பிடித்திருந்தனர். 


மேலும் புலவர் புலமைப்பித்தன், எழுத்தாளர் சிவசங்கரி, கவிஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு இயல் பிரிவில் பாரதி விருதும், எஸ், ஜானகி, சரோஜா, டி.வி. கோபாலகிருஷ்ணன், லலிதா ஆகியோருக்கு இசை பிரிவில் சரஸ்வதி விருதும் வழங்கப்படுகிறது.