ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான ரேடியோ ரூம்!
Storytelling App And Audio Ott: பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும்.
ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கிக்கு ஊடக வட்டாரங்களில் அறிமுகம் தேவையில்லை. விஜய் தொலைக்காட்சி மற்றும் புது யுகம் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்த இவர், சுயாதீன தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தரமான பல நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் ஆவார். வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையினாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க | இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். சுவாரசியமான, ஆழ்ந்து போக வைக்கக்கூடிய அதீத கதைக் கேட்கும் அனுபவத்தை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரேடியோ ரூம், வெறும் ஆடியோ புத்தகம் மட்டுமே அல்ல. கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும்.
ரேடியோ ரூம் செயலியில் பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும் அரங்கேற இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ரேடியோ ரூமில் தற்சமயம் தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன. விரைவில் இந்திய மொழிகளில் மராத்தி மற்றும் வங்காள கதைகளும், பன்னாட்டு மொழிகளில் ஸ்பேனிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மானிய கதைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ரேடியோ ரூமில் பலவகையான கதைகள் – செந்தரம், குற்றம், காதல் மற்றும் குழந்தைகளுக்கான கதைகள் உள்ளன. புனை கதை அல்லாத பிரிவுகளில் உடல் நலம், ஆரோக்கியம், பயணம் மற்றும் ஆன்மீகம் உள்ளிட்ட தலைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வெங்கியின் இடைவிடாத மற்றும் அயராத முயற்சியாலும் விஜய் ரெட்டி, மௌனிகா ரெட்டி ஆகியோரின் உறுதுணையாலும் இன்று உருவாகி நிற்கிறது ரேடியொ ரூம். தளம் உருவாக்குவதிலும் புதுமைகளை செயல்படுத்துவதில் புகழ்பெற்ற லைட்டஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ரேடியோ ரூம் கைகோர்த்துள்ளது. அர்த்தமுள்ள கதைகளையும் கருத்துகளையும் உருவாக்கும் உத்தரவாதத்துடன் கதைகளின் உலகை மேலும் அழகாக்க போகும் இந்த இரு குழுமங்களும் வெகு விரைவில் வீடியோ OTT மற்றும் ஆன்லைன் தொலைக் காட்சியையும் அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். உற்சாகமும் எதிர்பார்ப்பும் பொங்கட்டும். கேளிக்கை உலகில் புதுமைகள் மலரட்டும்.
மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ