தமிழ் திரைப்பட இயக்குநர்கள் பலர் காதல், சண்டை, அதிரடி ஆக்ஷன் போன்ற கதைகளை விடுத்து, தற்போது புது மாதிரியான கதைகளையும் உருவாக்க ஆரம்பித்து விட்டனர். இந்திய திரையுலகிற்கே சயின்ஸ் ஃபிக்ஷன் என்ற வகை திரைப்படங்கள் புதுவிதமாகத்தான் தோன்றுகிறது. ஆனால், அப்படி புது வகையான திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து வருகின்றன. அப்படி ரசிகர்களை கவர்ந்த படங்களில் சில ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்திரன்:


ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம், எந்திரன். ரோபோக்களை ஹாலிவுட் திரையுலகில் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு ரோபோ தமிழில் பேசுவதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இந்த சிட்டி ரோபோவை எத்தனை ஆண்டு கடந்தாலும் மறக்க மாட்டேன் என்று கூறும் அளவிற்கு இருந்தது, இப்படத்தின் தாக்கம். இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ஷங்கர் இப்படத்தை இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளத்தில் ஆன்லைனில் பார்க்கலாம்.  


மேலும் படிக்க | வசூலில் 50 கோடியை கடந்த அயலான்! கோவையில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்!


2.0:


இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளியானது 2.0. இந்த படத்திலும் ரஜினிகாந்த்தான் ஹீராேவாக நடித்திருந்தார். முதல் படத்தின் அதே கூட்டணி இந்த படத்திலும் இணைந்தது. இதில், அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்திருந்தார். படம், பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டீரியலாக மாறினாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை பெற்றது. இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். 


மாநாடு:


சிம்பு நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம், மாநாடு. டைம் லூப்பில் மாட்டிக்கொண்ட இளைஞர், எப்படி அதிலிருந்து வெளியேறினான் என்பது போன்ற கதையை இப்படத்தில் காண்பித்திருந்தனர். இது, சிம்புவிற்கு கம்-பேக் படமாக இருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம். 



இன்று நேற்று நாளை:


2015ஆம் ஆண்டு வெளியான படம், ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். மியா, ஆர்யா, கருணாகரன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதனை ஆர்.ரவிகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 


டிக் டிக் டிக்:


ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்த படம், டிக் டிக் டிக். பூமியை நோக்கி வரும் எரிகல்லை தடுத்து நிறுத்த விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் குறித்த கதை இது. படத்தில் ஆங்காங்கே லாஜிக்கல் தவறுகள் இருந்தாலும், படம் பலருக்கு பிடித்து இருந்ததது. இந்த படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். 


அயலான்:


‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கி பிரபலமான ஆர்.ரவிகுமார், அயலான் படத்தையும் இயக்கியிருந்தார். இப்படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம், தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 


மேலும் படிக்க | இந்தியன் 2 to தங்கலான்: பெரும் தொகைக்கு ஓடிடியில் விலை போன புது படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ