இந்தியன் 2 to தங்கலான்: பெரும் தொகைக்கு ஓடிடியில் விலை போன புது படங்கள்!

Upcoming Movies Digital OTT Rights And Price: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பல படங்கள் இந்த ஆண்டில் வெளிவர உள்ளன. அப்படி தியேட்டரில் வெளியாகும் படங்களின் ஓடிடி உரிமங்கள், பல கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

Upcoming Tamil Movies Digital OTT Rights And Price: இந்த வருடம் முன்னணி திரை பிரபலங்களின் பல படங்கள் திரைக்கு வர உள்ளன. ஓடிடி தளங்களின் வருகையால், பல படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஓடிடி தளங்களில் பெரிய விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த நிலையில், இனி வெளியாக இருக்கும் பெரிய படங்கள், பல கோடி ரூபாய்க்கு பிரபல ஓடிடி தளங்களின் உரிமத்திற்கு விற்பனையாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி, பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கும் படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

1 /8

கமலின் இந்தியன் 2 படம் முதல் சிவகார்த்திகேயனின் 21வது படம் வரை, பல படங்கள் இந்த வருடம வெளியாக இருக்கின்றன. படங்கள் வெளியாகி எத்தனை கோடி வசூலை ஈட்டுகின்றன என்பதை விட, டிஜிட்டல் உரிமையில் எத்தனை கோடி விலை போகிறது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி, இனி ரிலீஸாகும் படங்கள், எத்தனை கோடிக்கு விலை போயுள்ளன என்பதை பார்க்கலாமா? 

2 /8

சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படத்தை 'SK21'என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த வருடம் வெளியாகும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை, ரூ.40 கோடி வரை விலைபோயுள்ளதாம். இதை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

3 /8

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், தங்கலான். இப்படம், பொங்கலன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில ப்ரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடிக்கப்படாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. வரும் ஏப்ரல் மாத்த்தில் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.75 கோடி கொடுத்து ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாம். 

4 /8

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம், விடாமுயற்சி. இந்த படத்தில் த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் ரூ.100 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியானதற்கு சில நாட்களுக்கு பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

5 /8

விஜய் இரு வேடங்களில் நடித்து வரும் படம், கோட் (Greatest Of All Time-GOAT). இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, மைக் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது, விஜய்யின் 68வது  படமாகும். 

6 /8

கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் ரூ.150 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, கடைசியாக வெளியான விஜய்யின் லியோ படமும் பெரிய தொகை கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தால் வாங்கப்பட்டது. 

7 /8

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம், இந்தியன் 2. இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

8 /8

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, பல ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் ரூ.2000 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளதாகவும் இந்தியன் 3 படமும் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.