தொடர்ந்து பல படங்களை கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வரும் தமிழ் படம் 2 படக்குழு தற்போது கமல், ரஜினியின் பக்கம் திரும்பி உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த ரிசல்டை பாகுபலி படத்தில் வரும் காட்சியை பயன்படுத்தி போஸ்டர் வெளியிடப்பட்டது.


சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இதுவரை 15-க்கும் மேற்பட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள தமிழ் படம் குழு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நடிகர்களை கலாய்த்து வருகின்றனர். இதில் தற்பேது ரஜினியும் கமலும் சிக்கி உள்ளனர். 


ரஜினியின் காலா படத்தை கலாய்க்கும் வகையில் நடிகர் சிவா டைனோசரை தடவிக்கொடுத்தப்படி அமர்ந்திருக்கும் போஸ்டரும், விஷ்வரூபம் கமல் கெட்டப்பில் நகைச்சுவை நடிகர் சதீஷ் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது. 



இதையடுத்து, விஜயகாந்த் நடிப்பில் உருவான சின்ன கௌண்டர் படத்தையும் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது! 



மேலும் 4 டிவி விளம்பரங்கள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.