ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் டாப்ஸி.  தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.  இவர் நடிப்பில் வெளியான பிங்க், பட்லா, கேம் ஓவர் போன்ற படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ 'ஜெயில்' படத்தின் ஓடிடி உரிமை - உயர்நீதிமன்றம் உத்தரவு


இவர் நடித்த ஆடுகளம் படம் தேசிய விருதுகளை வென்றது.  2013-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'ஆரம்பம்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.  இவர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் 'சபாஷ் மிது'  என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.



இந்த திரைப்படத்தை ஏற்கனவே ராகுல் தோலாகியாவால் இயக்கப்பட இருந்த நிலையில், சில காரணங்களால்  ஸ்ரீஜித் முகர்ஜி வசம் சென்றது.  கடினமாக உழைத்து உலக கோப்பையை கைப்பற்ற வாய்த்த மித்தாலி ராஜின் அசைவுகள் ஒவ்வொன்றும் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட்டது.


கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  இப்படம் 2022 பிப்ரவரி-4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே டாப்ஸி 'ராஷ்மிகா ராக்கெட்' என்கிற படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்ததை தொடர்ந்து, இப்போது விளையாட்டு சம்மந்தப்பட்ட இந்த படத்தில் நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு மித்தாலி ராஜின் பிறந்தநாளான டிசம்பர்-3 அன்று  வெளியாகியுள்ளது.


ALSO READ 29 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை - விஜய்யின் வெற்றியும் தோல்வியும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR