29 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை - விஜய்யின் வெற்றியும் தோல்வியும்!

விஜயின் 29 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை தற்போது இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 3, 2021, 07:54 PM IST
29 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை - விஜய்யின் வெற்றியும் தோல்வியும்!

1992ம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய்.  ஆரம்ப காலகட்டத்தில் இந்த மூஞ்சியை பணம் கொடுத்து பார்க்க வேண்டுமா என்று பலர் கிண்டல் அடித்த நிலையில் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது கடின உழைப்பின் மூலம் உயர்ந்துள்ளார்.  விஜயின் 29 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை தற்போது இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1990 காலகட்டத்தில் காதல் படங்களை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.  செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா போன்ற படங்கள் கதை ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூலில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

ALSO READ ஒரே மாதத்தில் இவ்ளோ படங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த NETFLIX!

1996ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் கரியரை மாற்றியது.  அந்தப்படம் பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்கள் வரை சென்றடைந்து மிகப் பெரிய வெற்றி அடைந்தது.  அதற்குப் பிறகு வெளிவந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களின் மூலம் ரொமான்டிக் ஹீரோ என்ற அந்தஸ்தைப் பெற்றார் விஜய்.  தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். 

vijay

அதற்குப் பிறகு குசி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், ஷாஜகான் என வரிசையாக அனைத்து படங்களும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்தது.  2003-ம் ஆண்டிலிருந்து தான் தேர்ந்தெடுக்கும் கதைகளை மாற்றினார்.  திருமலை, கில்லி, திருப்பாச்சி என தொடர்ந்து அதிரடியான ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.  அதற்கு பிறகு வேட்டைக்காரன், போக்கிரி போன்ற படங்களும் வெற்றி பெற்றது. 

vijay

2007ஆம் ஆண்டு முதல் விஜயின் கதை தேர்வு மோசமாக அமைந்தது.  அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன், வில்லு, சுறா, காவலன், வேலாயுதம் என தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்து வந்தார்.  இதில் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை.  அதற்கு பிறகு 2012ஆம் ஆண்டு முதல் மீண்டும் தன் கதையை தேர்வு மாற்றியமைத்தார்.  நண்பன், துப்பாக்கி, ஜில்லா, தலைவா, கத்தி போன்ற படங்கள் 100 கோடி வசூல் சாதனை பெற்றது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புலி திரைப்படம் படு மோசமாக தோல்வி அடைந்தது.  அதன் பிறகு வெளிவந்த தெறி, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த உள்ளார் தளபதி விஜய்.  தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது.

beast

ALSO READ பிரேமம் கலந்த அர்ஜுன் ரெட்டியாக தமிழில் ஒரு Bachelor! Bachelor விமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News