தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், ஹரிகாந்த். இவர் நடித்த படத்தின் டீசர் சமீபத்தில்தான் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளம் நடிகர்:


தெலுங்கு திரையுலகை சேர்ந்த இளம் நடிகர், ஹரிகாந்த். இவர், சில தெலுங்கு மொழி படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து வந்தார். சிறு சிறு வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தார்.  மேடை நாடக கலைஞராக இருந்த இவருக்கு சமீபத்தில் ஒரு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


கீடா கோலா:


தெலுங்கில் பிரபல காமெடி நடிகராக உள்ள பிரம்மானந்தம் நடிக்கும் படம், கீடா கோலா. காமெடி படமாக உருவாகியுள்ள இதனை தருண் பாஸ்கர் தாஷ்யம் என்பவர் இயக்கியிருந்தார். இவரே இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன் படக்குழுவில் இணைந்தவர், ஹரிகாந்த். இவருக்கு வயது 33.


மேலும் படிக்க | ‘வாடிவாசல்’ படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்..! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?


மாரடைப்பால் மரணம்:


கீடா கோலா படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் ஹரிகாந்திற்கு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. ஷூட் முடித்துவிட்டு வீடு திரும்பியவர், பிணமாக மறுநாள் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. 


“இதயமே நொறுங்கி விட்டது..”


நடிகர் ஹரிகாந்தின் இறப்பு குறித்து சில பதிவுகளை கீடா கோலா படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். அப்படத்தின் இயக்குநர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு இதை கேட்டதில் இருந்து மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. என் இதயமே நொறுங்கி விட்டது. மிகச்சிறந்த மேடை நாடக கலைஞராக கடந்த 3 ஆண்டுகளாக உழைத்த நடிகர் ஹரிகாந்த். இவரை பார்த்தவுடன் கீடா கோலா படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த படத்திலும் அவர் நல்ல வேடத்தில் நடித்துள்ளார். நேற்றுதான் படக்குழுவை சந்தித்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் குறித்து கேட்டு விட்டு சென்றார். வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாததாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று பக்காவாக நடித்து தரும் கலைஞர் என்றும் ஸ்க்ரீன் டைம் எவ்வளவாக இருந்தாலும் அதையும் நடித்துக்கொடுப்பார் என்றும் அந்த இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் அதுவும் இவ்வளவு இளமையான வயதில் இவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டமாக தோன்றுகிறது என்றும் அந்த இயக்குநர் தனது பதிவில் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | பாலிவுட் நட்சத்திரங்களுடன் கைகோர்த்த த்ரிஷா..! சர்ப்ரைஸ் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ